ஆவேஷ் அல்லது அர்ஷ்தீப்.. இனி யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு.. ஏன் இந்த முடிவு தெரியுமா??
துபாய்: இந்திய அணியில் ஆவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் இருவரில் யாரேனும் ஒருவருக்கு தான் இனி வாய்ப்பு என்ற முடிவை ரோகித் எடுக்கவுள்ளார்.
Recommended Video
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வரும் செப்டம்பர் 4ம் தேதியன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமான மாற்றம்
இந்நிலையில் இனி வரும் போட்டிகளில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்த ரோகித் முடிவெடுத்துள்ளார். புவனேஷ்வர் குமார் முதன்மை தேர்வாக இருப்பார் என்பதால், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரின் இடம் பறிக்கப்படவுள்ளது. இதற்கு காரணம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கால சூழல் தான்.

என்ன காரணம்
தொடர்ச்சியாக நடைபெற்ற போட்டிகளால், துபாய் பிட்ச்-ல் வேகம் குறைந்து பவுன்ஸ் குறைந்துள்ளது. இதனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிக சாதகம் உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாறுகிறார்கள். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் 44 ரன்களும், ஆவேஷ் கான் 53 ரன்களும் வாரி வழங்கினார்கள். அதுவும் கடைசி கட்டத்தில் கொடுத்ததால் ரோகித் கோபமடைந்தார்.

விராட் கோலி பவுலிங்
இந்த போட்டியில் 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்தியா களமிறங்கியிருந்ததால், ரோகித் சர்மா வேறு வழியின்றி விராட் கோலியிடம் ஓவரை கொடுத்தார். கோலியும் ஒரு ஓவரை வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார். எனவே இனி வரும் போட்டிகளில் இந்தியா 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும்.

ஜடேஜாவின் விலகல்
இதுஒருபுறம் இருக்க, இந்திய அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சாஹலுடன் இனி அக்ஷர் பட்டேல் களமிறங்கலாம். கூடுதலாக தீபக் ஹூடாவும் அணியில் சேர்க்கப்பட்டால் ஸ்பின்னராக பயன்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications