Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைகீழாக தான் குதிப்பேன்.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிர்ச்சி முடிவு.. ஆப்கானிஸ்தானுக்கு செம லக்

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணி இன்று களமிறங்கியுள்ளது.

Recommended Video

Asia Cup-ல் Pakistan தோல்வி! India-வின் வெற்றிக்கான Reasons என்ன | Aanee's Appeal

ஆசிய கோப்பை வரலாற்றில் வங்கதேசம் அணி, ஆப்கானிஸ்தான் அணியை இதுவரை வென்றதே இல்லை.

இந்த நிலையில், ஷார்ஜா மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று செஸிங் செய்யும் அணியே அதிக முறை வென்றுள்ளது.

டாஸ்

டாஸ்

இந்த நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசக், பேட்டிங் செய்வதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கருதுவாக கூறினார். முதலில் அதிக ரன்களை நிர்ணயித்தால், அதனை சேஸ் செய்ய ஆப்கானிஸ்தானுக்கு சிரமமாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஷகிபுல் ஹசன், மூன்று வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதாக கூறினார்.

கேப்டன் முகமது நபி

கேப்டன் முகமது நபி

இதனைத் தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்முகமது நபி, இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வெற்றி வீரர்களை உத்வேகம் அடைய செய்ததாக குறிப்பிட்டார். ஆடுகளம் புதுசாக இருப்பதாக தெரிவித்த நபி, பந்து பேட்டிற்கு அதிகமாக வராது என கருதுவதாக தெரிவித்தார். இதனால், வங்கதேசத்தை குறைந்த ஸ்கோரில் சுருட்டி, வெற்றி பெற முயற்சிப்போம் என்று நபி கூறினார்.

ஆப்கானிஸ்தான் லெவன்

ஆப்கானிஸ்தான் லெவன்

ஆப்கானிஸ்தான் - 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, கரிம் ஜன்னட், 5, நஜிபுல் சர்தான், 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபசல் ஃபரூக்கி

வங்கதேசம் லெவன்

வங்கதேசம் லெவன்

1,முகமது நயிம், 2,அனாமுல் ஹக், 3,ஷகிபுல் ஹசன், 4, அஃபிப் ஹுசைன், 5, முஸ்பிகுர் ரஹிம், 6, முகமுதுல்லா, 7, மொஸ்தேக் ஹூசைன்,, 8.மெஹதி ஹசன். 9,முகமுதுல்லா சபியுதின், 10,டஸ்கின் அகமது, 11,முஸ்தபிசுர் ரஹ்மான்

Story first published: Tuesday, August 30, 2022, 19:50 [IST]
Other articles published on Aug 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+