For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 தொடர் வெற்றிக்கு வழிவகுத்த மந்திரம்..இந்தியாவுடனும் பயன்படுத்தும் இலங்கை.. சமாளிப்பது கடினம் தான்?

துபாய்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் வித்தியாச வியூகத்தை அமைக்கவுள்ளார்.

Recommended Video

Asia Cup 2022 Final-க்கு India Qualify ஆக என்ன வழி?

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளின் இந்த மோதல் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இலங்கை மோதல்

இலங்கை மோதல்

கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் தோல்வியடைந்ததால், இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் இலங்கை அணி வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் என தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அல்ல ஃபார்மில் உள்ளதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது.

 அச்சுறுத்தும் பயிற்சியாளர்

அச்சுறுத்தும் பயிற்சியாளர்

இந்திய அணி தற்போது உள்ள ஃபார்முக்கு, இலங்கை அணியின் பலம் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளர் செய்யும் வியூகத்தை இந்தியாவால் தாங்க முடியாது. போட்டியின் போது களத்திற்கு வெளியில் இருக்கு தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ரகசிய குறியீடு எண்கள் மூலம் கேப்டனுக்கு சில அறிவுரைகளை கொடுத்து வருகிறார்.

காரணம் என்ன

காரணம் என்ன

அழுத்தமான சூழல்களின் போது கேப்டன் தவறான முடிவை எடுக்கக்கூடலாம். எனவே வெளியில் இருந்து பயிற்சியாளர் தெளிவான வியூகத்தை கொடுப்பார். இதனை சற்றும் எதிர்பாராத எதிரணி பேட்ஸ்மேன்கள் சொதப்புவார்கள். இந்த திட்டம் கைக்கொடுத்ததால் இலங்கை அணி தொடர்ச்சியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது.

கூடுதல் பணிகள்

கூடுதல் பணிகள்

எனவே இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இலங்கை கேப்டன் என்ன முடிவெடுப்பார் என்பதை கணிப்பதோடு சேர்த்து, களத்திற்கு வெளியில் இருந்து வரும் ரகசிய குறியீடுகள் என்வென்பதையும் கணிக்க வேண்டும். 2 போட்டிகளில் வெற்றி தந்த வியூகத்தை ரோகித் தகர்த்தெறிவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, September 6, 2022, 10:22 [IST]
Other articles published on Sep 6, 2022
English summary
India vs srilanka match in asia cup 2022 ( ஆசிய கோப்பை தொடரில் இந்தியா vs இலங்கை போட்டி ) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய வியூகத்தை சமாளிப்பதில் ரோகித் சர்மா சிரமப்படுவார் எனத்தெரியவந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+