Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முக்கிய சிக்கல்.. ஹாங்காங் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11.. பரிசோதனை செய்வாரா டிராவிட்!

துபாய்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா இன்று 2 முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Recommended Video

Asia Cup-ல் Pakistan தோல்வி! India-வின் வெற்றிக்கான Reasons என்ன | Aanee's Appeal

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

பலம்வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் இன்று நடைபெறும் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் ப்ளேயிங் 11ல் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தான்.

முதல் மாற்றம்

முதல் மாற்றம்

148 என்ற குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய போதும், ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் அதிரடி காட்ட முயன்று டக் அவுட்டானார். நீண்ட மாதங்களாக கிரிக்கெட்டே விளையாடாமல் இருந்த ராகுலின் ஃபார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவருக்கு இனியும் வாய்ப்பு தந்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்பதை ரோகித் சிந்தித்து வருகிறார். ஏனென்றால் அவரை நீக்கினால் நல்ல ஃபார்மில் உள்ள ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

 2வது பிரச்சினை

2வது பிரச்சினை

இந்திய அணிக்கு உள்ள 2வது பிரச்சினை லோயர் ஆர்டர் தான். ஒருவேளை கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டால், லோயர் ஆர்டரில் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டியுள்ளது. கடந்த 5 போட்டிகளாக தினேஷ் கார்த்திக்கின் தேவை அணியில் இல்லாமல் உள்ளது. இதுஒருபுறம் இருக்க, மிடில் ஓவர்களில் இடதுகை ஸ்பின்னர்களை சமாளிக்க இடதுகை வீரர் ரிஷப் பண்ட் இல்லாததால், ஜடேஜாவை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்தது.

இதுவே சரியான நேரம்

இதுவே சரியான நேரம்

ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் இந்த போட்டியில் இந்திய அணியின் காம்பினேஷனை சரி செய்தே தீர வேண்டும். ஏனென்றால் வரவுள்ள ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தயராவதற்காக அணியை சரிசெய்தே தீர வேண்டும்.

Story first published: Wednesday, August 31, 2022, 11:33 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+