ஜடேஜாவுக்கு புரோமோஷன் கொடுத்தது சரியா? தவறா?.. 3 காரணங்களால டிராவிட் எடுத்த முடிவு
துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி பல சோதனை முயற்சிகளை எடுத்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது.
Recommended Video
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல் கோல்டன் டக் ஆனார்.
இதனையடுத்து, ரோகித் சர்மாவும் விராட் கோலியும் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விமர்சனம்
சிக்சர் அடிக்க முற்பட்டு ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் தான் களமிறங்க வேண்டும். ஆனால் 7வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஜடேஜாவுக்கு 4வது இடத்திற்கு ராகுல் டிராவிட் புரோமோஷன் வழங்கினார். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

காரணம் என்ன
ஆனால், சில கிரிக்கெட் யுத்தி காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரணம், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது. பொதுவாக லேக் ஸ்பின்னர் மற்றும் இடது கை ஸ்ப்பினர்களை எதிர்கொள்வதில் வலது கை பேட்ஸ்மேன்களை விட, இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகம் அதிகம்.

தலைவலி
அதற்கு தகுந்தார் போல் ஜடேஜா சுழற்பந்துவீச்சில் சிக்சர் அடித்தார். 2வது காரணம், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தற்போது ஒரே இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா தான். இதனால், ஒரு வலது கை பேட்ஸ்மேனும், ஒரு இடதுகை பேட்ஸ்மேனும் பேட்டிங் செய்தால் , அது பந்துவீசும் அணிக்கு கொஞ்சம் தலைவலியை தரும்.

கை கொடுக்குமா யுத்தி
ஃபில்டர்களை மாற்றுவதும், பந்துவீச்சாளர்கள் சரியான லைனில் பந்துவீசுவதும் கெடும். மூன்றாவதாக ஜடேஜா அதிரடியாக ஆடி பந்துக்கும், தேவைப்படும் ரன்னுக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்க அதிரடியாக ஆட தான் அனுப்பபட்டார். ஆனால் ஜடேஜா சென்சிபிள் இன்னிங்ஸ் என்ற பெயரில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள கொஞ்சம் நேரத்தை எடுத்து கொண்டார்.


Click it and Unblock the Notifications