Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup - இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் வெற்றியை தீர்மானிக்கும் 4 தனிநபர் மோதல்கள்

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த ஆட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய நான்கு தனிநபர் மோதல்கள் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.இந்தியாவும், பாகிஸ்தானும் மோத போகிறது என்றால் அது அணிகளுக்கு இடையே விட தனிநபர் மோதல்கள் மிகவும் முக்கிய கவனத்தை ஈர்க்கும்.

சொல்லப்போனால் சச்சின்- அத்தர், டிராவிட் -வக்கார் யூனிஸ்,சேவாக்- வசிம் அக்ரம், தோனி- உமர் குல் என தனிநபர் மோதல்கள் மிகவும் கவனத்தை ஈர்க்கும். இந்த வகையில் வரும் இரண்டாம் தேதி இதேபோல் நான்கு தனிநபர் மோதல்கள் கவனத்தை இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அது ஒட்டுமொத்த அணிக்கும் வெற்றியை கொடுக்கும்.

Asia cup -2023 - 4 Key Battles in India vs Pakistan game

ரோகித் vs ஷாகின் ஆப்ரிடி: இந்த வகையில் ஷாகின் ஆப்ரிடி ரோகித் சர்மாவுக்கு இடையிலான மோதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ரோகித் சர்மா, ஷாகின் அஃப்ரிடி இடதுகை வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையில் கூட ரோகித் சர்மா ஷாகின் ஆப்ரிடியிடம் கோல்டன் டக் ஆனார். இந்த இடதுகை வேகப்பந்து வீச்சை ரோகித் சர்மா எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ அதை வைத்து தான் இந்தியாவின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

கோலி vs ஹரிஸ் ரவுஃப்: இதேபோன்று இரண்டாவது மோதல் விராட் கோலிக்கும் ஹாரிஸ் ரவுஃப்க்கும் இடையில் இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் ஹாரிஸ் ரவுஃப் ஓவரில் விராட் கோலி அடித்த இரண்டு சிக்ஸர்கள் தான் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. விராட் கோலியின் அந்த ஆட்டம் தம்மால் மறக்கவே முடியாது என ஹாரிஸ் ரவுஃப் கூறியிருந்தார். இந்த நிலையில் இவ்விருவரும் மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார்கள்.

பாபர் அசாம் vs பும்ரா: இந்த மோதலில் மூன்றாவதாக முக்கியத்துவத்தை ஈர்ப்பது பாபர் அசாமும், பும்ராவும் இடையே உள்ள போட்டி தான். உலகின் முதல் நிலை வீரராக பாபர் அசாம் அறியப்பட்டாலும், பும்ரா அவரை பழிவாங்க காத்திருக்கிறார். ஏனெனில் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பும்ரா பந்துவீச்சை, பாபர் அசாம் பொளந்தார். இந்த நிலையில் வரும் இரண்டாம் தேதி மோத உள்ள போட்டியில் பாபர் அசாம்க்கு பும்ரா பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குல்தீப் vs ரிஸ்வான், இஃப்திகார்: இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது குல்திப் யாதவ், இஃப்திகார் அகமது இடையே உள்ள போட்டி தான். நேபாளம் அணிக்கு எதிராக 67 பந்துகளில் இஃப்திகார் சதம் அடித்தார் .மேலும் ரிஸ்வானும் ஒரு அரணாக இருக்கிறார். இந்த நிலையில் குல்தீப் யாதவ் தன்னுடைய சுழற் பந்து வீச்சால் பாகிஸ்தானின் நடுவரிசை வீரர்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்து வெற்றி அமையும்.

Story first published: Thursday, August 31, 2023, 12:10 [IST]
Other articles published on Aug 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+