For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம்.. இதுவரை 7 இந்தியர்கள் செய்த சம்பவம்

கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளது தான் தற்போது ஹாட் நியூஸ் ஆக இருக்கிறது .இதற்குக் காரணம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் பல பரிட்சை நடத்துகிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியாவே அதிக முறை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் 13 முறை மோதி இருக்கிறார்கள்.

Asia cup 2023 - 7 Indian players won the man of the match award vs pakistan

இதில் இந்தியா ஏழு முறையும் பாகிஸ்தான் ஐந்து முறையும் ஒரு ஆட்டம் மழையாலும் ரத்தாகி இருக்கிறது. கடைசியாக ஆசிய கோப்பையில் இந்த அணிகளும் ஐந்து முறை ஒருநாள் போட்டிகளில் மோதிய நிலையில் அதில் நான்கு போட்டியில் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இலங்கை மண்ணில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை மோதி இருக்கிறார்கள்.

இதில் இந்தியா ஒரு முறையும் பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் அதிக முறை இந்திய வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார்கள்.

இதில் முதல் முறையாக சுரேந்தர் கண்ணா 1984 ஆம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்.அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு அர்சத் அயூப் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவும், 2010 ஆம் ஆண்டு கௌதம் கம்பீரும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு விராட் கோலி 2018 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமாரும் அதே தொடரில் அரையிறுதியில் ஷிகர் தவானும் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார்கள்.
மேலும் ஆசிய கோப்பை தொடரில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி எட்டு முறையுடன் முதலிடத்திலும் ரோஹித் சர்மா ஏழு முறையுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Story first published: Saturday, September 2, 2023, 0:04 [IST]
Other articles published on Sep 2, 2023
English summary
Asia cup 2023 - 7 Indian players won the man of the match award vs pakistan ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம்.. இதுவரை 7 இந்தியர்கள் செய்த சம்பவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+