Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹிட்மேன் ஹூக்கும் ! சச்சின் சாதனையை முறியடிக்க போகும் ரோகித் சர்மா.. வெறும் 163 ரன்கள் தான் தேவை

பாலக்கல்லே: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை சனிக்கிழமை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா,கில், விராட் கோலி ஆகிய மூன்று பேரும் மிகப்பெரிய ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Asia cup 2023 - Rohit sharma need 163 runs to achieve massive record in odi

டாப் 3 வரிசை வீரர்களில் ஒருவர் சதம் அடித்தால் கூட அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை எட்டும். இதனால் ரோகித் சர்மா இம்முறை தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அதிகபட்சம் ஆறு போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல் கல்லை எட்ட உள்ளார். ரோகித் சர்மா இந்த தொடரில் 163 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு டெண்டுல்கர், கோலி, கங்குலி, டிராவிட், தோனி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இந்த நிலையில் ரோகித் சர்மா தற்போது 9837 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். மேலும் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற வாய்ப்பு உள்ளது. இந்த மைல்கல்லை விராட் கோலி 205 இன்னிங்ஸில் கடந்து வந்த நிலையில், சச்சின் 259 இன்னிங்சில் எட்டி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தற்போது ரோகித் சர்மா 237 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதனால் அவர் சச்சினின் சாதனையை உடைக்க வாய்ப்பு இருக்கிறதுமேலும் நடப்பாண்டில் உள்ளே ரோகித் சர்மா தோனியின் அதிக ஒரு நாள் ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது விளையாடி வரும் வீரர்கள் இடையே பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படத்திருக்கிறார்.

தற்போது அவர் 720 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்த தொடரில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மூன்று முறை விளையாடி 280 ரன்கள் எடுத்தால் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதனால் ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே கடும் போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 1, 2023, 12:50 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+