For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி வீட்டுக்கு போங்க.. இந்திய அணியில் நடந்த அந்த சம்பவம்.. மிரள வைக்கும் உள்ளடி அரசியல்!

கொழும்பு : காயத்துடன் இருக்கும் வீரர் உத்தேச இந்திய அணியில் இருக்கிறார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா என தெரியாத மற்றொரு வீரர் அணியில் கூட இடம் பெற்று விட்டார்.

ஆனால், கடந்த மாதம் தான் ஆடிய கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சனை உத்தேச அணியில் கூட இடமில்லை என இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறது அணி நிர்வாகம். இந்த பாகுபாடு குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Asia Cup 2023 : Sanju Samson sent home even with Shreyas Iyer spasm

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யருக்கு முதுகு வலி என்றும், கே எல் ராகுல் அவருக்கு பதில் ஆடுவார் என்றும் கூறியதை அடுத்து இந்த விவகாரம் கிளம்பி இருக்கிறது.

ஆசிய கோப்பை : 2023 ஆசிய கோப்பைக்கான அணியில் கடந்த சில மாதங்களாக காயத்தால் போட்டிகளில் பங்கேற்காத வீரர்களான கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பெற்றனர். அவர்கள் இருவரும் பேட்ஸ்மேன் என்பதால் அவர்களுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சனை உத்தேச அணியில் தேர்வு செய்தது இந்திய அணி. அவருக்கு போட்டிக்கான அணியில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்றாலும் அவர் காயத்தால் பிற வீரர்கள் வெளியேறினால், இக்கட்டான நிலையில் மாற்று வீரராக அணிக்குள் நுழையும் ஒரு சிறு வாய்ப்பு இருந்தது.

ராகுல் நிலை : கே எல் ராகுல் காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் இடம் பெற்று இருந்தார். குரூப் சுற்றுப் போட்டிகளிலேயே அவர் அதனால் பங்கேற்கவில்லை. ஆனால், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக இலங்கை விரைந்த அவர் அணியில் பயிற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரேயாஸ் வலி : அதன் பின்னணி என்ன என தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு மாற்றாக எப்படியாவது கே எல் ராகுலை அணியில் சேர்க்க வேண்டும் என கடும் முயற்சி செய்துதான் அவரது காயம் குணமாகும் முன்பே அணியில் பயிற்சிக்கு அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

திருப்பி அனுப்பப்பட்ட சாம்சன் : உண்மையில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு காயம் என்றால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், கே எல் ராகுலை அணியில் சேர்க்க முயற்சி எடுத்ததோடு, சஞ்சு சாம்சனை கே எல் ராகுலுக்கு மாற்று வீரராகத் தான் அணியில் சேர்த்தோம். எனவே ராகுல் வந்து விட்டதால் சஞ்சு சாம்சன் தேவையில்லை எனக் கூறி அவரை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி இருப்பது தான் மிக மோசமான அரசியலாக பார்க்கப்படுகிறது.

அணியில் பாகுபாடு? : இந்த விவகராத்தால் இந்திய அணியில் பாகுபாடு பார்க்கப்படுவதாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள் விமர்சிக்கத் துவங்கி உள்ளனர். இதற்கு பதில் சொல்லுமா இந்திய அணி நிர்வாகம்?

Story first published: Sunday, September 10, 2023, 15:48 [IST]
Other articles published on Sep 10, 2023
English summary
Asia Cup 2023 : Sanju Samson sent home even with Shreyas Iyer spasm
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+