For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை 2023 - பயிற்சி ஆட்டத்தில் தெறிக்கவிட்ட விராட் கோலி.. 123 பந்துகளில் 160 ரன்கள் குவிப்பு

பெங்களூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி செல்லும் நிலையில் பெங்களூரில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளே விளையாடி இருக்கிறார்கள்.

ஐபிஎல் பாணியில் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளே இரண்டு அணியாக பிரிந்து 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் திறனை கண்டு கொள்வதற்காக வெறும் பேட்ஸ்மேன்கள் மட்டும் ஒரு இன்னிங்ஸில் விளையாடி இருக்கிறார்கள்.

Asia cup 2023 - Virat kohli smashed 160 runs from 123 balls in practice match reports

அதன் படி ரோகித் சர்மா, கில் ,விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் கே எல் ராகுல் ஆகியோர் இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்கள். அதன் ஸ்கோர் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா நான்கு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்திருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில்லும், விராட் கோலியும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி இருக்கிறார்கள்.

இதில் 35 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி அசுரத்தனமாக ரன்களை குவித்திருக்கிறார். 123 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 160 ரன்கள் குவித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று காயத்திலிருந்து திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருக்கிறார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 71 பந்துகளை எதிர் கொண்டு 85 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதேபோன்று கே எல் ராகுலும் அரை சதம் கடந்து இருக்கிறார். 67 பந்துகளை எதிர்கொண்டு ராகுல் 55 ரன்கள் சேர்த்திருக்கிறார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்து இருக்கிறது. விராட் கோலி,ஸ்ரேயாஸ்,கே.எல். ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி இருப்பது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Story first published: Tuesday, August 29, 2023, 15:25 [IST]
Other articles published on Aug 29, 2023
English summary
Asia cup 2023 - Virat kohli smashed 160 runs from 123 balls in practice match reports ஆசிய கோப்பை 2023 - பயிற்சி ஆட்டத்தில் தெறிக்கவிட்ட விராட் கோலி.. 123 பந்துகளில் 160 ரன்கள் குவிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+