Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2023 - இந்திய அணியில் உள்ள பலம், பலவீனம் என்ன? என்ன பிரச்சினைகள் இருக்கிறது?

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக இந்திய அணி வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் களமிறங்கி உள்ள ஆறு அணிகளிலே இந்திய அணி தான் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேப்பர் அளவில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாகவே உள்ளது.

Asia cup 2023 - What are the strength and weakness of indian team

இந்த நிலையில் இந்தியாவின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் பலம் என்றால் மற்ற அணிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அனுபவம் நிறைந்த வீரர்கள் நமது அணியில் பல பேர் இருக்கிறார்கள். பிளேயிங் லெவனில் அனைவருமே ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக் கூடியவர்கள். ரோகித் சர்மா, கில், விராட் கோலி ,ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஜடேஜா என பேட்டிங்கில் இமயமலை போல் இந்திய அணி இருக்கிறது.

இதேபோன்று பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ,ஜடேஜா, குல்தீப் யாதவ் என திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் எதிரணி வீரர்களுக்கு இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதே சமயம் இந்திய அணிக்கு சில பல குறைகளும் இருக்கிறது. பொதுவாக டாப் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் அது அணிக்கு சாதகமாக இருக்கும்.

இந்திய அணியில் ஜடேஜாவை தவிர பிளேயிங் லெவனில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பல முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி பெறுவதற்கு இடது கை வேக பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவது தான் காரணமாக அமைகிறது.

இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், பும்ரா போன்ற வீரர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எப்படி விளையாட போகிறார்கள் என்று தெரியவில்லை. போதிய மேட்ச் பிராக்டிஸ் இல்லாததால் அவர்களுடைய பார்ம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதேபோன்று விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சமி போன்ற வீரர்களும் ஓய்வில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்கள்.இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் அவர்கள் பேட்டிங்கில் தடுமாற வாய்ப்புகள் இருக்கிறது.

Story first published: Tuesday, August 29, 2023, 13:53 [IST]
Other articles published on Aug 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+