ஆசிய கோப்பை 2025 தொடரில் உடைக்க முடியாத 10 சாதனைகள்.. ரோகித், கோலிக்கு எந்த இடம்
துபாய்: ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை நடைபெறுவதால் அதற்கு தயாராகும் விதமாக இந்த தொடர் இம்முறை t20 போட்டிகளாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் யாராலும் உடைக்க முடியாத 10 சாதனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணி ஒரே போட்டியில் 38 எக்ஸ்ட்ரா ரன்களை இரண்டு முறை வழங்க இருக்கின்றது. இந்த இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இந்திய அணி இருக்கின்றது. ஹாங்காங் எதிரான போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் சுரேஷ் ரெய்னா 68 பந்துகளில் 101 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனை இன்னும் யாராலும் உடைக்க முடியாத படி இருக்கின்றது. இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் ரோகித் சர்மா இருக்கின்றார். ரோகித் சர்மா இந்த தொடரில் அதிகபட்சமாக 40 சிக்ஸர்கள் அடித்து இருக்கின்றார். அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 26 சிக்ஸர்களுடன் உள்ளார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் மலிங்கா இருக்கின்றார்.
மலிங்கா மூன்று முறை இந்த தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார். இந்த மூன்றுமே பாகிஸ்தானுக்கு எதிராக தான் அவர் நிகழ்த்தி இருந்தார். இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கின்றார். ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முரளிதரன் இருக்கின்றார்.
முரளிதரன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மெண்டிசும், ஜடேஜாவும் இருக்கின்றனர். இருவரும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று இருப்பதால் இனி அடுத்த முறை 50 ஓவர் போட்டியாக ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று, அதில் ஜடேஜா பங்கேற்றால் மட்டுமே இந்த சாதனையை தகர்க்க முடியும்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஜெயசூர்யா இருக்கின்றார். ஜெயசூர்யா ஒரே தொடரில் 378 ரன்கள் அடித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த சாதனையை இன்னும் யாராலும் தகர்க்க முடியவில்லை. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மீண்டும் ஜெயசூர்யா தான் இருக்கின்றார். ஜெயசூர்யா ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக 6 சதம் அடித்திருக்கின்றார். இந்த பட்டியலில் விராட் கோலி ஐந்து சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதால், நடப்பு தொடரில் அவர் இந்த சாதனையை முறியடிக்க முடியாது. வேண்டுமென்றால் அடுத்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டியாக நடைபெறும் போது விராட் கோலி இந்த ரெக்கார்டை முறியடிக்கலாம். ஆனால் அதற்கு விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறாமல் இருக்க வேண்டும்.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் விராட் கோலி ஒரே இன்னிங்ஸில் 183 ரன்கள் அடித்தது ஆசியக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இதற்கு இரண்டாவது இடத்தில் பாபர் அசாம் 151 ரன்களுடன் நேபாள் அன்னிக்கு எதிராக அடித்திருந்தார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மெண்டிஸ் இருக்கின்றார். இலங்கை வீரர் மெண்டிஸ் 2008 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு அடுத்தபடியாக சிராஜ் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் மெண்டிஸ் குறைந்த ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா இருக்கின்றார். ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமை ரோகித்திடம் இருக்கிறது. ரோகித் 28 ஒரு நாள், ஒன்பது டி20 என மொத்தம் 37 போட்டிகள் விளையாடி இருக்கின்றார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜடேஜா 26 போட்டியுடன் உள்ளார். இதனால் ரோகித்தின்இந்த சாதனையை முறியடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்.


Click it and Unblock the Notifications