Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய 5 பவுலர்கள்.. வெற்றியே இவங்க கையில் தான் இருக்கு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், யுஏஇ, ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கு பெறுகின்றன.

டி20 தொடராக நடைபெறும் இந்த போட்டியில் கவனத்தில் இருக்கக்கூடிய ஐந்து பவுலர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இருக்கின்றார்.

Asia cup 2025

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறேன் என பும்ரா தாமாக முன்வந்து அணியில் சேர்ந்திருக்கிறார். இதுவரை 70 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி இருக்கின்றார். ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய நாளில் பெரிய அணிகளை கூட வீழ்த்த கூடிய உத்வேகத்தை பெற்றிருக்கிறார்கள். அதில் ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முக்கியமான வீரராக இருக்கின்றார்.

இதுவரை 46 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருடைய எக்னாமி 6.80 என்று அளவில் இருக்கின்றது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் முன்னாள் சி எஸ் கே வீரர் முஸ்தபிர் ரஹ்மான் இருக்கின்றார். ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் முஸ்தஃபீசுர் ரஹ்மான் அதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இதுவரை 113 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 142 விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார். இதில் அவருடைய எக்கனாமிக் 7.30 என்ற அளவில் இருக்கின்றது. இதுவரை டி20 கிரிக்கெட் மூன்று முறை நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதிரானா இருக்கின்றார். சி எஸ் கே அணியின் பந்துவீச்சு முதுகெலும்பாக இருக்கும் பதிராணா இதுவரை 19 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 30 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 16 என்று அளவில் இருக்கின்றது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி இருக்கின்றார். 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு தலைவராக உள்ள அவர் வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, September 8, 2025, 18:38 [IST]
Other articles published on Sep 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+