Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வருவதற்குள் ஓமனுக்கு எதிராக 3 விக்கெட் இழந்த பாகிஸ்தான்.. வசீம் அக்ரம் கிண்டல்

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தினாலும், பேட்டிங் செய்யும்போது விரைவாக சில விக்கெட்டுகளை இழந்தது விமர்சனத்தை பெற்றிருக்கிறது.பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓமன் போன்ற கத்துக்குட்டி நாடுகளுக்கு எதிராக இப்படி பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி தடுமாறுவது விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

Pakistan vs oman

இது குறித்து கிண்டல் அடித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம், இதற்கு முன்பு உங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளாத பௌலர்களை முதன்முறையாக எதிர்கொள்ளும் போது சில தவறுகள் நடக்கும்.ஒன்று அல்லது இரண்டு பந்துகளை நீங்கள் முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு அதிரடியாக விளையாட வேண்டும்.

எனினும் பாகிஸ்தான் அணியில் பர்ஹான் மற்றும் முகமது ஹாரிஸ் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். நான் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்காக சென்று வருவதற்குள் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முகமது ஹாரிஸ் தற்போது நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்குகிறார்.

அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பக்கர் சமான் ஏன் நடு வரிசையில் இறங்குகிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும் அவர் தொடக்க வீரராக தான் விளையாடினார். தற்போது அவர் நான்காவது வீரராக விளையாடுகிறார். பிளேயிங் லெவனில் மட்டும் ஐந்து ஆறு தொடக்க வீரர்கள் இருந்தால் இந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தானில் கவனம் செலுத்த வேண்டும் என்று வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஓமன் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரே ஒரு ஸ்பெஷல் வேகப்பந்துவீச்சாளரை வைத்து களமிறங்கியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான செப்டம்பர் 14ஆம் தேதி ஹாரிஸ் ரவுப்பை நீங்கள் பிளேயிங் லெவனுக்குள் பாகிஸ்தான் கொண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 13, 2025, 7:07 [IST]
Other articles published on Sep 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+