ஆசிய கோப்பையில் சொதப்பிய பாகிஸ்தான் அணியை விளாசும் முன்னாள் வீரர்கள்
டாக்கா: ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடியதால், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அந்த அணி தோற்றதோடு, பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், முன்னணி வீரர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீ்க் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான், நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பேட்செய்த வங்கதேசம் கடைசி ஓவரில் வெற்றியை தனதாக்கி பைனலுக்கு முன்னேறியது. இந்தியாவுடன், பைனலில் மோத கிடைத்த நல்ல வாய்ப்பை பாகிஸ்தான் கோட்டை விட்டுவிட்டது.

அக்தர் கருத்து
பாகிஸ்தானின் பேட்டிங் இந்தியாவுக்கு எதிராகவும் சொதப்பியிருந்த நிலையில், இப்படி அணி வீழ்ச்சியடையும் என்று நினைக்கவில்லை என்று, முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாக். வீரர்கள் தங்களை தாங்களே ஊக்கப்படுத்திக்கொண்டு ஆடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

பேட்டிங்கை சாடும் மிஸ்பா
பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேன்கள்தான் சரியாக ஆடவில்லை என்று கூறியுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா உல்-ஹக், பிட்ச்சின் தன்மையை அணி உள்வாங்கவில்லை என்றும், சோயிப் மாலிக்கை முன்கூட்டியே பந்து வீச அனுமதித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சோயிப் மாலிக்
சுழலுக்கு சாதகமான பிட்சில் சோயிப் மாலிக்கை முன்கூட்டியே பந்து வீச செய்திருக்க வேண்டும். 7வது அல்லது 8வது ஓவரில் அவரை களமிறக்கியிருக்க வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

மியாண்டட் ஏமாற்றம்
ஜாவித் மியாண்டட், முகமது யூசுப் போன்ற பல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் பேட்டிங்கை கிழித்து தோரணம் கட்டியுள்ளனர். நான் சமீப காலத்தில் பார்த்ததிலேயே மோசமான பேட்டிங் பங்களிப்பு என்றால் அது இதுதான்.. என்று ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications