மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியதால் தற்போது இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி அதன் பிறகு உலக கோப்பை தொடருகான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

அதன்பின் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில் இதே காலகட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கிரிக்கெட் இடம் பெற்றிருக்கிறது. இதனால் இந்திய அணி தங்களுடைய இரண்டாம் தர வீரர்களை அந்த தொடருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் ஆக பணிபுரிய உள்ளார்.
மேலும் தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மன் இருக்க உள்ளார்.இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரரான சிவம் மவிக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக காஷ்மீரை சேர்ந்த அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கை சேர்க்க இந்திய அணி முடிவு எடுத்துள்ளது. முதலில் இந்த இடத்திற்கு யாஷ் தாக்கூரை தான் சேர்க்க தேர்வு குழு முடிவு எடுத்திருந்தது.
ஆனால் அவர் காயம் காரணமாக விளையாடதால் தற்போது உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் ரிசர்வ் வீரர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்களுக்கான இடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதிக்கப்பட்ட 15 வீரர்கள் மட்டும்தான் செல்ல இருக்கிறார்கள்.
இந்தத் தொடரில் இந்திய அணி நேரடியாக கால் இறுதி சுற்றின் விளையாடும்.அதில் வெற்றி பெற்றால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.