Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட், ஹாக்கியால் இந்தியாவுக்கு 4 தங்கம் கிடைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் எதிர்பார்ப்பு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் கோலாகலமாகத் தொடங்க உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகள் தங்கப் பதக்கங்களை அள்ளும் முனைப்பில் களமிறங்குகின்றன. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற இந்திய அணிகள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் பிரிவில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடவர் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மகளிர் அணியும் களமிறங்குகின்றன. இந்திய ஆடவர் அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 189.21 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடும் இவரை வீழ்த்த எதிரணிகள் வியூகம் அமைத்து வருகின்றன.

காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆப்கானிஸ்தான் தொடரில் மிரட்டிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பந்துவீச்சுக்கு தலைமை தாங்குகிறார். எனவே, இந்திய அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

Asian Games 2026 Cricket and Hockey Might Bring 4 Gold Medals For India

மகளிர் ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்துடன் இந்திய மகளிர் அணி களம் காண்கிறது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். தீப்தி சர்மாவுடன் இணைந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஹாக்கியில் 44 ஆண்டு கால ஏக்கம் தீருமா?

சமீபத்திய ஹாக்கி உலகக் கோப்பையில் ஆடவர் அணி 8-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தாலும், மகளிர் அணி 5-வது இடத்தைப் பிடித்து அசத்தியது. பயிற்சியாளர் சோர்ட் மரின் வழிகாட்டுதலில், சலீமா டெட்டே தலைமையில் மகளிர் அணி மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளது. இந்த முறை இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றால், 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும். கடைசியாக 1982-ல் மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது.

அதேபோல், ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான ஆடவர் ஹாக்கி அணி, கடந்த முறை வென்ற தங்கப் பதக்கத்தைத் தக்கவைக்கவும், உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்து ஒலிம்பிக் தகுதியை உறுதி செய்யவும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

ஆசிய விளையாட்டுப் பதக்க வரலாறு:

  • ஹாக்கி ஆடவர் அணி: 4 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்
  • ஹாக்கி மகளிர் அணி: 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்
  • கிரிக்கெட் (ஆடவர் & மகளிர்): 2022-ல் இரண்டு அணிகளுமே தலா 1 தங்கப் பதக்கம் வென்றுள்ளன.

போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி):

கிரிக்கெட் ஆடவர் அணி அட்டவணை:

  • செப்டம்பர் 28: இந்தியா vs எதிரணி (2-வது காலிறுதி) - காலை 10:30 மணி
  • அக்டோபர் 1: முதல் அரையிறுதி - காலை 5:30 மணி
  • அக்டோபர் 1: 2-வது அரையிறுதி - காலை 10:30 மணி
  • அக்டோபர் 3: 3-வது இடத்துக்கான போட்டி - காலை 5:30 மணி
  • அக்டோபர் 3: இறுதிப்போட்டி - காலை 10:30 மணி

கிரிக்கெட் மகளிர் அணி அட்டவணை:

  • செப்டம்பர் 18: இந்தியா vs ஜப்பான் (4-வது காலிறுதி) - காலை 10:30 மணி
  • செப்டம்பர் 20: முதல் அரையிறுதி - காலை 5:30 மணி
  • செப்டம்பர் 20: 2-வது அரையிறுதி - காலை 10:30 மணி
  • செப்டம்பர் 22: 3-வது இடத்துக்கான போட்டி - காலை 5:30 மணி
  • செப்டம்பர் 22: இறுதிப்போட்டி - காலை 10:30 மணி

ஹாக்கி ஆடவர் அணி அட்டவணை:

  • செப்டம்பர் 20: இந்தியா vs இந்தோனேசியா - காலை 11:30 மணி
  • செப்டம்பர் 22: இந்தியா vs இலங்கை - பிற்பகல் 3:30 மணி
  • செப்டம்பர் 24: கொரியா vs இந்தியா - காலை 11:30 மணி
  • செப்டம்பர் 26: ஜப்பான் vs இந்தியா - பிற்பகல் 1:30 மணி
  • செப்டம்பர் 28: இந்தியா vs வங்கதேசம் - பிற்பகல் 3:30 மணி
  • அக்டோபர் 1: முதல் அரையிறுதி - பிற்பகல் 1:00 மணி
  • அக்டோபர் 1: 2-வது அரையிறுதி - பிற்பகல் 3:30 மணி
  • அக்டோபர் 3: வெண்கலப் பதக்கப் போட்டி - பிற்பகல் 1:00 மணி
  • அக்டோபர் 3: தங்கப் பதக்க இறுதிப்போட்டி - பிற்பகல் 3:30 மணி

ஹாக்கி மகளிர் அணி அட்டவணை:

  • செப்டம்பர் 20: இந்தியா vs உஸ்பெகிஸ்தான் - காலை 7:30 மணி
  • செப்டம்பர் 21: இந்தியா vs இந்தோனேசியா - காலை 9:30 மணி
  • செப்டம்பர் 23: தாய்லாந்து vs இந்தியா - காலை 11:30 மணி
  • செப்டம்பர் 25: ஜப்பான் vs இந்தியா - காலை 7:30 மணி
  • செப்டம்பர் 27: இந்தியா vs சிங்கப்பூர் - பிற்பகல் 3:30 மணி
  • செப்டம்பர் 30: முதல் அரையிறுதி - பிற்பகல் 1:00 மணி
  • செப்டம்பர் 30: 2-வது அரையிறுதி - பிற்பகல் 3:30 மணி
  • அக்டோபர் 2: வெண்கலப் பதக்கப் போட்டி - பிற்பகல் 1:00 மணி
  • அக்டோபர் 2: தங்கப் பதக்க இறுதிப்போட்டி - பிற்பகல் 3:30 மணி
Story first published: Friday, September 18, 2026, 9:47 [IST]
Other articles published on Sep 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+