Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் ஸ்டைல் மாற்றம்.. ஹெலிகாப்டர் ஷாட்.. பழைய பன்னீர்செல்வமாக திரும்பும் டோணி!

டெல்லி: வங்கதேசத்தில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டோணி பழைய ஹெலிகாப்டர் டோணியாக திரும்ப போகிறாராம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோணி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முழு அளவில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடியது.

டெஸ்டில் ஓய்வு

டெஸ்டில் ஓய்வு

டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, கேப்டன் டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்பிறகு உலக கோப்பை முடிந்து தற்போது இந்தியா வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்தது. டோணிக்கு பதிலாக டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்ட கோஹ்லி தலைமையில் வங்கதேசத்தில் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஆடியது.

ஒருநாள் போட்டிக்கு ரெடி

ஒருநாள் போட்டிக்கு ரெடி

இந்நிலையில், 18ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பிக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு டோணியே கேப்டனாக செயல்பட உள்ளார். வங்கதேசம் செல்வதற்கு முன்பாக டெல்லியில், தனது பயிற்சியாளர் எம்.பி.சிங் மேற்பார்வையில் டோணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பேட்டிங் ஸ்டைலை மாற்றி டோணி பயிற்சி எடுத்தார்.

ஓங்கியடிச்சா..

ஓங்கியடிச்சா..

இதுகுறித்து பயி்சியாளர் சிங் கூறுகையில், "டோணி தனது நிற்கும் நிலையை மாற்றியமைத்து, சற்று அகலமாக கால்களை வைத்துள்ளார். பேட்டை, இரு கால்களுக்கு நடுவே வைத்துக்கொள்கிறார். தொடக்க காலங்களில் டோணி இதுபோலத்தான் பேட் செய்தார். அதே நிலைக்கு திரும்ப இந்த ஸ்டைல் அவருக்கு உதவும். பேட்டை உயரமாக தூக்கியடிக்க இந்த ஸ்டைல் பயன்பெறும்.

பறந்த பந்துகள்

பறந்த பந்துகள்

ஐபிஎல் போட்டிகளில் ஆடிய ஸ்பின்னர்கள் சாஹல் மற்றும் பவன் நேகி ஆகியோர் டோணிக்கு பந்து வீசி பயிற்சி எடுக்க உதவினர். அப்போது, பந்துகளை பலமாகவும், நேர்த்தியாகவும் டோணி விளாசினார். இது அவரது பழைய அதிரடியை நினைவு கூறுவதாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் தடுப்பு ஆட்டம் ஆடுவதற்காக பேட்டிங் ஸ்டைலை டோணி மாற்றியிருந்தார். இதனால்தான் அவரது அதிரடி நடுவில் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தது" என்று பயிற்சியாளர் கூறினார்.

வரணும், டோணி பழைய பன்னீர்செல்வமா வரணும்..

Story first published: Monday, June 15, 2015, 16:33 [IST]
Other articles published on Jun 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+