Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ENG: உலகின் பிரம்மாண்ட ரெக்கார்டை உடைத்த மிட்செல் ஸ்டார்க்.. வாசிம் அக்ரம் சாதனை முறியடிப்பு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இமாலய சாதனையைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் படைத்திருந்த 'அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்' என்ற சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல் - இரவு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளிலேயே ஸ்டார்க் இந்த வரலாற்றை நிகழ்த்திக்காட்டினார்.

AUS vs ENG Ashes 2025 Mitchell Starc Breaks Wasim Akram s World Record for Most Test Wickets by a Left-Arm Pacer

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்துக்கு, முதல் ஓவரிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஸ்டார்க். முதல் ஓவரின் பென் டக்கெட்டை 'கோல்டன் டக்' முறையில் வெளியேற்றினார். சிறிது நேரத்தில் ஆலி போப்பையும் டக் அவுட் ஆக்கினார். இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம், வாசிம் அக்ரமின் 414 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார்.

ஹாரி ப்ரூக் விக்கெட் - சாதனை முறியடிப்பு

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவ் ஸ்மித் பிடித்தார். இது மிட்செல் ஸ்டார்க்கின் 415-வது டெஸ்ட் விக்கெட் ஆகும். இதன் மூலம் வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றார்.

அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள்:

  • மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 415 விக்கெட்டுகள்*
  • வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 414 விக்கெட்டுகள்
  • சமிந்தா வாஸ் (இலங்கை) - 355 விக்கெட்டுகள்
  • டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) - 317 விக்கெட்டுகள்
  • மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) - 313 விக்கெட்டுகள்
  • ஜாகீர் கான் (இந்தியா) - 311 விக்கெட்டுகள்

முதல் ஓவர் மன்னன்

மிட்செல் ஸ்டார்க் 'பிங்க் பந்து' கிரிக்கெட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவர்தான்.

மேலும், இந்தப் போட்டியின் மூலம் மற்றொரு சுவாரஸ்யமான சாதனையையும் அவர் செய்துள்ளார். தொடர்ந்து 4-வது முறையாக, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். பெர்த் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும், அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், இப்போது பிரிஸ்பேனிலும் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார்.

Story first published: Thursday, December 4, 2025, 15:00 [IST]
Other articles published on Dec 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+