Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ரன்னுக்கு மேல அடிக்க மாட்டாங்க.. இவங்களையா டீமில் எடுத்தீங்க கோலி? பொங்கி எழுந்த ரசிகர்கள்!

அடிலெய்டு : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியானது.

இதில் அணித் தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

அவர்களுக்கு பதில் ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹாவுக்கு அணியில் இடம் அளித்தது சில ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் அணித் தேர்வு குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். பெரும்பாலும் சில வீரர்களை தேர்வு செய்யாதது குறித்து கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாருக்கு இடம்?

யாருக்கு இடம்?

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆட உள்ளனர்.

ஒதுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஒதுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காத டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியலையும் சேர்த்தே வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ஷுப்மன் கில், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதில் இடம் பெற்றுள்ளனர்.

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்

இளம் வீரர் ஷுப்மன் கில் ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு தான் அணியில் துவக்க வீரராக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

அதே போல, தன் பார்மை நிரூபிக்க முடியாமல் தவித்த ரிஷப் பண்ட், பயிற்சிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்து மிரட்டி இருந்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் சதம் அடித்து இருந்தார். அவருக்கும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

சாஹா, ப்ரித்வி ஷா

சாஹா, ப்ரித்வி ஷா

ஷுப்மன் கில், ரிஷப் பண்ட்டுக்கு பதில் அணியில் ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹா இடம் பெற்றுள்ளனர். கில், பண்ட் உடன் ஒப்பிடும் போது அவர்கள் இருவரும் அதிக ரன்கள் குவிப்பார்களா? என்பது சந்தேகமே. இந்த நிலையில் தான் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

20 ரன் கூட எடுக்க மாட்டார்கள்

20 ரன் கூட எடுக்க மாட்டார்கள்

சில ரசிகர்கள் சாஹா, ப்ரித்வி ஷா 20 ரன் கூட எடுக்க மாட்டார்கள். ஆனால், சமீபத்தில் ரன் குவித்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் கில், ரிஷப் பண்ட் சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும் போது எதற்காக சாஹா, ப்ரித்வி ஷாவை அணியில் தேர்வு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

விரிதிமான் சாஹாவின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை என்றாலும் அவர் விக்கெட் கீப்பிங் ரிஷப் பண்ட்டை விட சிறப்பாக உள்ளது. அதன் காரணமாக அவர் தேர்வு செய்யப்பட்டார். ஷுப்மன் கில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. ப்ரித்வி ஷா பல டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 16, 2020, 17:18 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+