Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 மாற்றங்கள்.. மொத்தமாக இந்திய அணியில் நடக்க வேண்டிய அதிரடி.. கம்பீர் வெளியிட்ட பரபர லிஸ்ட்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

எப்படி

எப்படி

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே அடுத்த போட்டியில் ஆட உள்ளார். அதேபோல் இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமியும் அணியில் இடம்பெற போவது இல்லை.

யார்

யார்

அதன்படி இந்த நிலையில் இந்திய அணியில் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் கருத்துப்படி இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட வேண்டும். அவருக்கு பதிலாக சுப்மான் கில் அணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும். கில் ஓப்பனிங் இறங்க வேண்டும்.

 வேறு எந்த வீரர்

வேறு எந்த வீரர்

அதேபோல் கோலிக்கு பதிலாக ராகுல் இறங்க வேண்டும். இவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்கலாம். அதேபோல் சாஹாவிற்கு பதிலாக அணிக்குள் பண்ட் கொண்டு வரப்பட வேண்டும். ஹனுமா விஹாரிக்கு பதிலாக ஜடேஜா வர வேண்டும். அணிக்குள் 5 பவுலர்கள் இருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.ஷமிக்கு பதிலாக சைனி அல்லது சிராஜ் இடம்பெறலாம் என்றுள்ளார்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்தின்படி இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ராகுல், பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா , உமேஷ் யாதவ், சிராஜ் அல்லது சைனி ஆகியோர் இடம்பெறலாம் என்று கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, December 23, 2020, 14:13 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+