Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் போதாது சார்.. சாரி.. ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ பொளேர் பதிலடி.. பாவம் பாஸ் ஹிட்மேன்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்படவில்லை.

ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்தால் மட்டுமே அணிக்குள் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ கூறி இருந்தது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இதனால் ரோஹித் சர்மா கஷ்டப்பட்டு உடற்பயிற்சி மேற்கொண்டு தனது பிட்னசை நிரூபித்தார். பெங்களூரில் சிகிச்சை மற்றும் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்தார். இதனால் அவர் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சர்மா அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் நடக்க உள்ளது.

தனிமை

தனிமை

இந்த நிலையில் ரோஹித் சர்மா தனிமைப்படுத்தும் விதி காரணமாக இன்னும் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் அவர் அறைக்கு உள்ளேயே முடங்கி இருக்கிறார். இந்திய அணி வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

கிடையாது

கிடையாது

ரோஹித் சர்மா மேற்கொண்ட பயிற்சிகள் எதுவும் போதாது.அவர் வலைப்பயிற்சியில் போதிய அளவில் ஈடுபட முடியவில்லை. அவர் இப்போது ஆஸ்திரேலிய மண்ணிற்கு புதிய வீரர். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. அவர் இன்னும் சில நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

போச்சு

போச்சு

அணியுடன் அவர் இணைந்த பின் பயிற்சி வேண்டுமானால் மேற்கொள்ளாமல், ஆனால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்கிறது . கே. எல் ராகுல், மயங்க் அகர்வாலை இந்திய அணியின் ஒப்பனர்களாக இறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடுவது கொஞ்சம் சந்தேகம்தான் என்கிறார்கள்.

Story first published: Tuesday, December 22, 2020, 9:44 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+