Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டிய ரோஹித் சர்மா.. அசால்ட்டாக பிட்னஸை நிரூபித்த ஹிட் மேன்.. விமர்சனங்களுக்கு பதிலடி

பெங்களூர்: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இன்று தனது பிட்னஸை நிரூபித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் இவர் மீண்டும் இணைவது உறுதியாகி உள்ளது.

இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரர் ரோஹித் சர்மா. ஆனால் இவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளவில்லை.

தொடையில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

நிலை என்ன

நிலை என்ன

இவர் ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் இன்று தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும். தனது காயம் சரியாகிவிட்டது. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ரோஹித் சர்மா இன்று பிட்னசை நிரூபிக்க வேண்டும். இதற்கான சோதனை இன்று நடந்தது.

பிட்னஸ்

பிட்னஸ்

இவருக்கு இன்று காயத்திற்காக ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதேபோல் இவரின் உடல் பிட்னஸை சோதனை செய்வதற்காக இன்று யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று நடந்த சோதனையில் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துள்ளார்.

கெடு

கெடு

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் கெரியரை இன்றைய தினம்தான் தீர்மானிக்கும் என்று பலரும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா இன்று நடந்த சோதனையில் தனது தகுதியை நிரூபித்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது .

கட்டாயம்

கட்டாயம்

இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது . நாளை இவர் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புள்ளது. அங்கு 10-14 நாட்கள் இவர் தனிமைப்படுத்தப்படுவார்.

Story first published: Friday, December 11, 2020, 14:02 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+