Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி இருந்தால் ஆட அனுமதிக்க முடியாது.. ரோஹித்திற்கு போடப்பட்ட கேட்.. அதிர்ந்த ஹிட்மேன்.. பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் இடம்பிடிக்க ரோஹித் சர்மாவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் சம பலத்துடன் தீவிரமாக விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்தியா அதிரடியாக ஆடி டி 20 தொடரில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இன்று மூன்றாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டாம் என்று விராட் கோலிதான் தடை போட்டார் என்றும் தகவல்கள் வந்தது.

காயம்

காயம்

ஆனால் உண்மையில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்படாமல் போனதற்கு அவருக்கு ஏற்பட்ட காயம்தான் காரணம் என்று கூறுகிறார்கள். கால் தொடையில் காயம் உள்ளது. இந்த காயத்தோடு விளையாட அனுமதித்தால் எதிர்காலத்தில் அவருக்கு காயம் பெரிதாகலாம். அதனால் காயம் குணமடையும் வரை அவர் ஆட வேண்டாம் என்று இந்திய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் தற்போது ரோஹித் சர்மா தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். தனக்கு இருக்கும் லேசான தொப்பையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். வீட்டில் ஓய்வு எடுத்து இவரின் உடல் எடை அதிகரித்துவிட்டது.

தொப்பை

தொப்பை

இதன் காரணமாக எப்படியாவது உடல் எடையை குறைக்க ரோஹித் திட்டமிட்டுள்ளார். அதிக உடல் எடை இருப்பதால்தான் காயம் ஏற்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று ரோஹித் நினைத்து வருகிறார். அதே சமயம் ரோஹித் சர்மாவின் உடற்பயிற்சிக்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ரோஹித் சர்மா உடல் எடை அதிக இருப்பதால் அவரை இந்திய அணியில் சேர்க்க அணி நிர்வாகம் தயங்குகிறது.

உடல் எடை

உடல் எடை

அதாவது அவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிக உடல் எடை இருப்பதாக என்று கூறி அவரை இந்திய அணியின் தேர்வுக்குழு புறக்கணிக்க போவதாக கூறப்படுகிறது. இவர் வரும் 11ம் தேதி நடக்க உள்ள பிட்னஸ் டெஸ்டுக்கு முன் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் அணியில் இடம்பெறுவது கஷ்டம்.

இப்படியே இருந்தால்

இப்படியே இருந்தால்

இதே உடல் எடையோடு இருந்தால் சரியாக இருக்காது. உடலை குறைத்துவிட்டு வாருங்கள் என்று இவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடலை குறைத்துவிட்டு 11ம் தேதி நடக்க உள்ள பிட்னஸ் டெஸ்டில் கலந்து கொள்ள ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 8, 2020, 10:25 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+