
நிலைமை என்ன
ரோஹித் சர்மா 11ம் தேதி மாலைக்குள் தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கெடு நாளை முடிகிறது. இதனால் நாளை பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும்.

நாளை எப்படி
கடந்த இரண்டு வாரமாக ரோஹித் சர்மா பெங்களூரில்தான் இருக்கிறார். தனது காயத்திற்கு இவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் தனது உடல் எடையை குறைக்கவும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நாளை இவருக்கு யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட முக்கிய சோதனைகள் செய்யப்படும்.

சோதனைகள்
மொத்தமாக ரோஹித் சர்மாவிற்கு இரண்டு விதமான சோதனைகளை செய்ய உள்ளனர். முதல் சோதனை இவரின் காயம் சரியாகிவிட்டதா என்பதாகும். இவரின் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது. இவர் வரும் நாட்களில் இந்திய அணியில் ஆட முடியுமா என்று இந்த டெஸ்டில் சோதனை செய்யப்படும்.

இரண்டாவது சோதனை
இரண்டாவதாக ரோஹித் சர்மாவின் எடை குறித்தும் சோதனை செய்யப்படும். ரோஹித் சர்மா உயரத்திற்கு தகுந்த எடையில் இருக்கிறாரா என்று சோதனை செய்யப்படும். யோ யோ டெஸ்ட் மூலம் இவரின் உடல் பிட்னஸ் சோதனை செய்யப்படும். இதில் தோல்வி அடைந்தால் மீண்டும் ரோஹித் சர்மாவிற்கு சோதனை செய்ய பல மாதங்கள் கூட ஆகலாம். இது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

என்னவெல்லாம் நடக்கும்
இந்த சோதனையில் வெற்றிபெற்றால் ரோஹித் சர்மா 12ம் தேதியே ஆஸ்திரேலியா செல்வார். அதோடு கொரோனா கட்டுப்பாடு காரணமாக இவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அல்லது ஜனவரி மாதம் நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இவரின் கிரிக்கெட் வாழ்க்கையே நாளைய தினத்தை நம்பி இருப்பதால் அவர் மிகவும் கவனமாக இதற்காக தயாராகி வருகிறார்.


Click it and Unblock the Notifications