Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கதை?.. இவர்தான் இந்திய டீமை காலி செய்தது.. வெளியான ஷாக் பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் அணியின் முக்கியமான நிர்வாகி ஒருவர் மிக முக்கிய காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகை கோலோச்சி வரும் இந்திய அணி கடந்த சில மாதங்களாக கொஞ்சம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் எடுத்த சில தவறான முடிவுகளால் இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் போதே இந்திய அணி மிக மோசமாக ஆடி செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் கடந்த இரண்டு வருடமாக இருக்கும் பிரச்சனை என்று பார்த்தால் அது மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் 5வது பவுலர்தான். யுவராஜ் சிங் சென்ற பின் இந்தியா அணியில் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு சரியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மிடில் ஆர்டரில் நல்ல வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் இந்திய அணி இன்னும் திணறி வருகிறது.

திணறல்

திணறல்

அதேபோல் மூன்று ஸ்பீட் பவுலர்களை தேர்வு செய்தால் ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலரை மட்டுமே இந்திய அணி தேர்வு செய்கிறது. கூடுதலாக 5வது முழு நேர பவுலர் இல்லாமல் இந்திய அணி கஷ்டப்பட்டு வருகிறது. கூடுதல் பவுலரை கொண்டு வந்தால் ஒரு பேட்ஸ்மேனைஇ தூக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

இடியப்பா சிக்கல்

இடியப்பா சிக்கல்

இந்திய அணி தற்போது இடியாப்ப சிக்கலில் மாட்டி உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணியில் இப்படி நிலவி வரும் பிரச்சனைக்கு அணியின் தேர்வு குழு தலைவராக இருந் எமஎஸ்கே பிரசாத்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மிடில் ஆர்டர் பிரச்சனை, பவுலர் பிரச்சனைகளை இவர் சரி செய்யாததுதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

எம்.எஸ். கே பிரசாத் மீது வைக்கப்படும் புகார்கள்

மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேனை கண்டுபிடிக்காதது.

ஆல்ரவுண்டர்களை கண்டுபிடிக்காமல், தேவையின்றி விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது.

சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களை புறக்கணித்தது.

முதல் தர போட்டிகளின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யாதது என்று இவர் மீது நிறைய புகார் உள்ளது.

மோசம்

மோசம்

இவரால்தான் கடந்த இரண்டு வருடமாக இந்திய அணி முறையான பிளேயிங் 11 அணியை தேர்வு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். தற்போது டெஸ்ட் அணியிலும் இதே பிரச்சனை எதிரொலிக்க தொடங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள பிசிசிஐ மீட்டிங்கில் இந்திய அணி தேர்வில் ஏற்பட்ட சொதப்பல் தொடர்பாக ஆலோசனை செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, December 22, 2020, 17:30 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+