Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு தவறு.. இப்ப பேசுங்க கோலி.. கேள்வி கணைகளை வீசும் முக்கிய புள்ளிகள்.. பெரிய பிரச்சனை!

சிட்னி: இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது இன்னும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்படவில்லை.

ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டாம் என்று விராட் கோலிதான் தடை போட்டார் என்றும் தகவல்கள் வந்தது. ரோஹித் சர்மாவை அணியில் எடுக்க கூடாது என்று வேண்டுமென்றே கோலி அரசியல் செய்தார் என்றும் கூறப்பட்டது.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா மோசமாக சொதப்பி உள்ளது. டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றது. ஆனாலும் ஒருநாள் தொடரில் மோசமாக ஆடி இந்தியா தோல்வி அடைந்தது.

டெஸ்ட்

டெஸ்ட்

அதன்பின் நடந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மோசமாக சொதப்ப காரணமே அணியின் ஓப்பனிங் சரியில்லாமல் போனதுதான். இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பதில் ஓப்பனிங் இறங்கிய மயங்க், பிரித்வி ஷா, சுப்மான் கில் என்று யாருமே சரியாக ஆடவில்லை.

ராகுல்

ராகுல்

கே. எல் ராகுல் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது இன்னும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இப்படிப்பட்ட வீரரைத்தான் கோலி ஆதரிக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்று புகார் வைக்கப்படுகிறது. கோலி வேண்டும் என்றே ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறார்.

தேவையின்றி அரசியல்

தேவையின்றி அரசியல்

கோலி தேவையின்றி அரசியல் செய்கிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ரோஹித் இல்லாமல் எதுவும் நடக்காது என்று தெரிந்துவிட்டது. இதனால் கோலி இனியாவது ரோஹித் சர்மாவிடம் மனம்விட்டு பேச வேண்டும். அவருடன் நட்பாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

அதேபோல் ரோஹித்தை கோலி தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தற்போது தனது பிட்னஸை நிரூபித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Story first published: Sunday, December 20, 2020, 11:28 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+