Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவரல்ல.. மொத்தம் 7 பேர்.. அடுத்தடுத்து சிக்கிய இந்திய வீரர்கள்.. பிசிசிஐ எப்படி இதை சமாளிக்குமோ!

சிட்னி: இந்திய அணியை சேர்ந்த மூத்த வீரர்கள் 7 பேர் இதுவரை மோசமாக காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் ராகுல் காயம் அடைந்து தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

கே. எல் ராகுல் இப்படி காயம் காரணமாக வெளியேறி உள்ள நிலையில், இந்திய அணியில் வீரர்களின் பிட்னஸ் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியை சேர்ந்த மூத்த வீரர்கள் 7 பேர் இதுவரை மோசமாக காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்திரேலிய தொடர் நடந்து வரும் நிலையிலும், விரைவில் இங்கிலாந்து தொடர் நடக்க உள்ள நிலையிலும் வீரர்கள் இப்படி காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

காயம்

காயம்

ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்திய அணியின் இரண்டு மூத்த வீரர்களான இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் இருவரும் காயம் அடைந்தனர். ஐபிஎல் தொடரின் போது இவர்கள் காயம் அடைந்தனர். அதன்பின் ஆஸ்திரேலிய தொடரில் ஷமி காயம் அடைந்தார்.

ஷமி

ஷமி

கையில் பந்து பட்டு, ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரும் அடுத்த ஐபிஎல் தொடர் வரை ஆட முடியாது. இன்னொரு பக்கம் உமேஷ் யாதவும் காயம் அடைந்தார். பீல்டிங் செய்யும் போது இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

 மோசம்

மோசம்

இப்படி வரிசையாக 4 பவுலர்கள் காயம் அடைந்த நிலையில் தற்போது கே . எல் ராகுலும் காயம் அடைந்துள்ளார். ஐவரும் தொடரில் இருந்து இதனால் வெளியேறி உள்ளனர். இது போக சைனி சின்ன காயத்தோடு கஷ்டப்பட்டு வருகிறார். இப்படி 6 முக்கியமான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

 ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவும் இந்த காயமடைந்தவர்கள் லிஸ்டில் இருந்தார். இப்போதுதான் அவர் உடல்நிலை சரியாகி உள்ளது. அடுத்தடுத்து இந்திய வீரர்கள் இப்படி காயம் அடைவது இந்திய வீரர்களின் பிட்னஸ் குறித்த கேள்வியையே எழுப்பி உள்ளது. இந்திய வீரர்கள் உண்மையில் பிட்டாக உள்ளனரா என்று கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ இந்த பிரச்னையை எப்படி சமாளிக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, January 5, 2021, 16:40 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+