விலகிய 2 பேர்.. நீக்கப்பட்ட 2 பேர்.. இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்.. பின்னணியில் என்ன நடந்தது?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில் 4 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது போட்டியில் எப்படியாவது வெள்ள வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ஓப்பனிங்
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும் சரியாக ஆடவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மான் கில் இந்திய அணியில் ஓப்பனிங் வீரராக நாளை ஆடுகிறார். இதுதான் அவருக்கு முதல் ஆட்டம் ஆகும்.

கீப்பர்
அதேபோல் இந்திய அணியில் கீப்பர் விர்த்திமான் சாகா நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மீண்டும் ரிஷாப் பண்டிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்தான் நாளை இந்திய அணியில் கீப்பிங் செய்வார். அணியில் ஆல் ரவுண்டர் ஹனுமா விஹாரி எப்போதும் போல நீடிப்பார்.

ஜடேஜா
இந்திய அணியில் கோலியின் இடத்தை யாரும் நிரப்பவில்லை. கோலிக்கு பதிலாக கே. எல் ராகுல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஜடேஜா கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிராஜ்
இந்திய அணியில் முகமது ஷமி காயம் காரணமாக ஆடவில்லை. இந்த நிலையில் தற்போது ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சிராஜ் இணைகிறார். இதுதான் இவருக்கு முதல் போட்டியாகும்.

முதல் போட்டி
இந்திய அணியில் தற்போது செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்களில் இரண்டு மாற்றங்கள் கட்டாயத்தின் பெயரில் செய்யப்பட்டுள்ளது. கோலி, ஷமி இரண்டு பேரும் தொடரில் இருந்து விலகியதால் தற்போது ஜடேஜா, சிராஜ் அணிக்குள் வந்துள்ளனர். இது போக பிரித்வி ஷா, சாகா நீக்கப்பட்டு சுப்மான், பண்ட் அணிக்குள் வந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications