14 நாட்கள்.. கடும் அவதி.. அவமானங்கள் அனைத்திற்கும் பதிலடி.. இன்று ரோஹித் சர்மாவிற்கு நடந்தது என்ன?
பெங்களூர்: கடந்த 14 நாட்களாக கடுமையாக கஷ்டப்பட்ட பெரிய போராட்டத்திற்கு பின் ரோஹித் சர்மா இன்று தனது பிட்னஸை நிரூபித்துள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலிய தொடரை இவர் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முழுக்க இவர் தேர்வு செய்யப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் இவர் ஆடினார். ஆனாலும் கூட ஆஸ்திரேலிய தொடரில் காயம் என்று கூறி இவர் புறக்கணிக்கப்பட்டார்.

காலில் காயம்
இவர் காலில் காயம் இருக்கிறது. அதனால் இவர் கஷ்டப்படுகிறார். இப்போது இவர் களமிறங்க கூடாது. அதையும் மீறி களத்திற்கு வந்தால் இவரின் கிரிக்கெட் எதிர்காலமே பாதிக்கப்படும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்
இன்னொரு பக்கம் இவரின் உடல் எடை அதிகமாக இருக்கிறது. அதனால் இவர் அணியில் சேர்வதற்கு முன் உடல் எடையை குறைக்க வேண்டும். அப்போதுதான் யோ யோ டெஸ்டில் பாஸ் செய்ய முடியும் என்றும் கூட கூறப்பட்டது.

அவமானம்
இடைப்பட்ட காலத்தில் ரோஹித் சர்மா இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இவருக்கு இருக்கும் குட்டி தொப்பை காரணமாக கடுமையான விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. கேப்டன் கோலியே ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலியா வரவில்லை என்று தெரியாது என்று கூறும் அளவிற்கு பிரச்சனை சென்றது.

கஷ்டப்பட்டார்
இந்த நிலையில் 14 நாட்கள் ரோஹித் சர்மா தொடர்ந்து கஷ்டப்பட்டு தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்து இருக்கிறார். அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்ற தனது காயத்தில் இருந்து விடுபட்டு உள்ளார். 14 நாட்களும் பெங்களூரில் தங்கி தீவிரமாக இதற்காக கஷ்டப்பட்டுள்ளார்.

நிலைமை என்ன
மொத்தமாக ரோஹித் சர்மாவிற்கு இரண்டு விதமான சோதனைகள் செய்யப்பட்டது . முதல் சோதனை இவரின் காயம் சரியாகிவிட்டதாக என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு, காயம் ஆறியது உறுதி செய்யப்பட்டது.

இரண்டாவது சோதனை
இரண்டாவதாக ரோஹித் சர்மா உயரத்திற்கு தகுந்த எடையில் இருக்கிறாரா என்று சோதனை செய்யப்பட்டது. யோ யோ டெஸ்ட் மூலம் இவரின் உடல் பிட்னஸ் சோதனை செய்யப்பட்டு, பிட்னஸ் உறுதி செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications