சனிக்கிழமை நடந்த சம்பவம்.. வலியில் துடித்த கே. எல் ராகுல்.. நீக்கப்பட்டது ஏன்? - பரபர பின்னணி!
சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர் கே. எல் ராகுல் காயம் அடைந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இதற்காக இந்திய வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வலைப்பயிற்சியின் போது இந்திய அணியின் மூத்த வீரர் கே. எல் ராகுல் காயம் அடைந்தார்.

காயம்
காயம் அடைந்த கே. எல் ராகுல் தற்போது ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரின் காயம் குணமாக மூன்று வாரம் ஆகும். இதனால் இவர் மீதம் இருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எப்படி
இந்த நிலையில் கே. எல் ராகுல் காயம் அடைந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நெட் பவுலர் வீசிய பந்து இவரின் கையில் பட்டுள்ளது. பந்து வேகமாக வந்து இவரின் மணிக்கட்டில் அடித்துள்ளது.

மணிக்கட்டில் அடித்தது
இதில் இவரின் எலும்பில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு எலும்பு பகுதி பெரிதாக வீங்கி உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நேற்றும் ராகுல் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்து வீக்கம் வடிகிறதா என்று சோதனை செய்துள்ளனர்.

இல்லை
ஆனால் இரண்டு நாட்கள் ஓய்விற்கு பின்பும் ராகுலின் காயம் சரியாகவில்லை. இதனால் அவருக்கு ஸ்கேன் செய்து சோதனை செய்தனர். இதில் இவரின் காயம் மோசமான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அறிவிப்பு
இதையடுத்து ராகுல் உடனே பெங்களூர் செல்ல வேண்டும். அங்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ராகுல் விரைவில் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications