Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஓவரிலேயே 24 ரன்கள்.. இவ்வளவு வேகம் தேவையா? அட்வைஸ் செய்த பாபர் அசாம்.. திருந்தாத ஹாரிஸ் ராஃப்

பெங்களூரு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்கள் விளாசப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிர் சேர்க்கப்பட்டார். இதன் பின் ஆஸ்திரேலிய அணி தரப்பில் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி களமிறங்கியது.

AUS vs PAK: Haris Rauf gave 24 runs including 4 Boundaries and a six in his first over against Australia in World Cup 2023

பாகிஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி வீசினார். முதல் பந்திலேயே ஷாகின் அப்ரிடி வார்னர் கால்களுக்கு வீசினார். அது வார்னரின் பேட்டில் அடித்து கால்களில் பட்டு சென்றது. இதனை அறியாமல் பாகிஸ்தான் அணியும் முதல் பந்திலேயே ரிவ்யூ செய்து ஏமாற்றமடைந்தது. இதனை தொடர்ந்து நிதானம் காட்டிய வார்னர், ஒரு கட்டத்தில் அதிரடிக்கு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து 4வது ஓவரில் ஷாகின் அப்ரிடி பந்தில் டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை பாகிஸ்தான் வீரர் மிர் தவறவிட்டார். இருப்பினும் 6வது ஓவரை சிறப்பாக வீசிய ஷாகின் அப்ரிடி ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இதனால் 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது.

இதன்பின் ஹாரிஸ் ராஃப் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்ட, 2வது பந்தில் சிக்சர் அடித்து டேவிட் வார்னர் வரவேற்றார். இதன்பின் ஹாரிஸ் ராஃப் ஒய்டு வீச, கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகின் அப்ரிடி இருவரும் அவருக்கு சில அறிவுரை வழங்கினர். குறிப்பாக வேகத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டதாக வர்ணனையில் சொல்லப்பட்டது.

ஆனால் அந்த அறிவுறுத்தல்களை ஏற்காத ஹாரிஸ் ராஃப் மீண்டும் 140 கிமீ வேகத்தில் வீச, அடுத்தடுத்து 3 பந்துகளிலும் 3 பவுண்டரிகளை விளாசினார் மிட்செல் மார்ஷ். இதனால் அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 24 ரன்கள் விளாசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை மொத்தமாக தங்கம் பக்கம் திருப்பவும் ஹாரிஸ் ராஃப் ஓவர் காரணமாக அமைந்துள்ளது.

Story first published: Friday, October 20, 2023, 15:26 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+