Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீல்டிங் மட்டுமல்ல.. மொத்த ஆட்டத்தை மாற்றிய அந்த வீரர்.. பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர். அதேபோல் பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

AUS vs PAK: Reason behind the failure of Pakistan team against Australia in World Cup 2023

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் 70 ரன்களும், ஷஃபிக் 64 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஃபீல்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக டேவிட் வார்னர் இரு முறை கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் அணி தவறவிட்டது ஆட்டம் ஒட்டுமொத்த மாற்றியது. அதேபோல் ஹாரிஸ் ராஃபின் முதல் ஓவரிலேயே விளாசப்பட்ட நிலையில், மீண்டும் லைன் மற்றும் லெந்தை மாற்றாமல் அதேபோல் பந்துவீசினார்.

இதனை மாற்றுவதற்கு கேப்டன் பாபர் அசாமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனிடையே 21 முதல் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களை சரியாக பயன்படுத்தாமல் இடையே வேகப்பந்துவீச்சாளர்களை பந்தை கொடுத்த கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சியும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் பெரிய இலக்கை சேஸ் செய்தாலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் சிறப்பாக அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதனை பயன்படுத்தி கடைசி 15 ஓவர்களில் அட்டாக்கை தொடங்காமல், பார்ட் டைம் பந்துவீச்சாளரான ஸ்டாய்னிஸை அட்டாக் செய்ய சென்று அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதேபோல் இதுபோன்ற ஆடுகளங்களில் ஆடம் ஜாம்பா அபாயகரமான வீரர் என்பதை அறிந்தும் அவரை அட்டாக் செய்ய நினைத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததும் காரணமாக உள்ளது.

குறிப்பாக இஃப்திகார் அஹ்மத் ஜாம்பா பந்தில் ஆட்டமிழந்தது தான் திருப்புமுனையாக அமைந்தது. ஒரே போட்டியில் ஃபீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி சொதப்பியுள்ளது. அதேபோல் பெங்களூரு மைதானத்தில் விளையாடிய அனுபவம் இல்லாததும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளது. இவற்றை சரி செய்து சென்னை நடக்கவுள்ள அடுத்த போட்டிக்கு பாகிஸ்தான் அணி சிறப்பான கம்பேக்கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, October 21, 2023, 0:03 [IST]
Other articles published on Oct 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+