For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதி பிளான் இங்க இருக்கு.. மீதி எங்க? வெஸ்ட் இண்டீஸ் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்! #AUSvsWI

நாட்டிங்ஹாம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பத்தாவது உலகக்கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த போது அம்பயர்கள் தொடர்ந்து தவறான தீர்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். எனினும், அதையும் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி சில திட்டங்களில் கோட்டை விட்டது.

2019 உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பாராத மிரட்டல் துவக்கம் பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்து, 105 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின், ஆஸ்திரேலிய அணியையும் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஒரே ஓவர்.. அடுத்தடுத்து 2 சர்ச்சை.. குறி வைக்கப்பட்ட கெயில்.. களத்தில் நிகழ்ந்த திக் மொமண்ட்ஸ்!ஒரே ஓவர்.. அடுத்தடுத்து 2 சர்ச்சை.. குறி வைக்கப்பட்ட கெயில்.. களத்தில் நிகழ்ந்த திக் மொமண்ட்ஸ்!

ஐந்து விக்கெட்கள்

ஐந்து விக்கெட்கள்

அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் பந்துவீச்சில் மிரட்டியது. ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்த போது, ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா கிளென் மேக்ஸ்வெல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் என ஐந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை 79 ரன்களுக்குள் வீழ்த்தியது.

திட்டங்கள் சரியில்லை

திட்டங்கள் சரியில்லை

எனினும், ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை அளித்தது. இதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் திட்டங்கள் சரியாக இல்லாதது தான்.

தெளிவான திட்டம்

தெளிவான திட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை திட்டமிட்டு வீழ்த்தியது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் குறிப்பிட்ட பந்துவீச்சாளர், குறிப்பிட்ட வகை பந்துகள் என தெளிவாக திட்டமிட்டு பந்து வீசினர். அவர்களது முயற்சியின் இடையே அதிக வைடுகள் கூட சென்றது.

தற்காப்பு ஆட்டம்

தற்காப்பு ஆட்டம்

ஐந்து விக்கெட்கள் வீழ்ந்த அலெக்ஸ் கேரி, ஸ்டீவன் ஸ்மித், டெஸ்ட் போல பல ஓவர்களை ரன் குவிக்காமல், விக்கெட்டை தற்காத்துக் கொள்ள முயன்றனர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைகளில் இருந்து போட்டி விலகியது. டாப் ஆர்டர் வீரர்களுக்கு திட்டம் போட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, லோயர் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்களுக்கு எந்த திட்டமும் வைத்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் எழுந்தது.

கோல்டர் நைல் அசத்தல்

கோல்டர் நைல் அசத்தல்

அதை நிரூபிப்பது போல எட்டாவதாக பேட்டிங் செய்ய இறங்கிய நாதன் கோல்டர் நைல் 92 ரன்கள் அடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைகளில் இருந்து போட்டியை ஆஸ்திரேலியா வசம் எடுத்து வந்தார். ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் குவித்தது.

தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ்

தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ்

அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின் போது அம்பயர்கள் தவறாக தீர்ப்பு அளித்து வந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி தாக்குப் பிடித்து ஆடியது. ஏழாவது வீரராக களமிறங்கினார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

ரஸ்ஸல் சொதப்பல்

ரஸ்ஸல் சொதப்பல்

ரஸ்ஸல் களமிறங்கிய போது 90 பந்துகளில் 99 ரன்கள் தேவை என்ற நிலை. ஆனால், அவர் அதிரடியாக ஆட முயன்றார். 5 விக்கெட்கள் வீழ்ந்து விட்ட நிலையில், இன்னும் ஒரு விக்கெட் போனாலும் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கைகளில் இருந்து போய் விடும் என்று தெரிந்தும், அதிரடியாக ஆட முயன்று 11 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

ஒருவேளை ரஸ்ஸல் கடைசி ஐந்து ஓவர்கள் இருக்கும் வரை பொறுமையாக ஆடி விட்டு, பின்னர் வேகம் எடுத்து இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்று இருக்கும். அந்த அணி தோல்வி அடைய பந்துவீச்சு திட்டங்களில் சொதப்பியதும், ரஸ்ஸல் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தும் தான்.

Story first published: Friday, June 7, 2019, 11:18 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
AUS vs WI Cricket World cup 2019 : Reason for West Indies loss against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X