Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆனா.. ஊனா.. சல்யூட் அடிக்குதே இந்த வெஸ்ட் இண்டீஸ் தம்பி.. என்ன மேட்டரு? #AUSvsWI

நாட்டிங்ஹாம் : வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெல்டன் காட்ரேல் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டை எடுத்து தன் வழக்கமான பாணியில் சல்யூட் அடித்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2019 உலகக்கோப்பை தொடரின் 10வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

AUS vs WI Cricket World cup 2019 : Sheldon Cottrell reason behind Salute celebration

அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் வேகத்தில் சரணடைந்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்களை எடுத்தார் ஷெல்டன் காட்ரேல். இது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.

ஷெல்டன் காட்ரேல் இவர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய பின் சல்யூட் அடித்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். வித்தியாசமான இந்த சல்யூட்டை கண்ட ரசிகர்கள், இவர் ஏன் இப்படி எப்போதும் சல்யூட் அடித்து வெற்றியைக் கொண்டாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

அதற்கான பதில் இதுதான். ஷெல்டன் காட்ரேல் கிரிக்கெட் விளையாட வரும் முன் ராணுவ வீரர் ஆவார். அவர் அடிக்கும் சல்யூட்டும் மிலிட்டரி சல்யூட்தான். தான் அப்படி சல்யூட் அடிப்பது ஜமைக்கா ராணுவத்துக்கு செய்யும் மரியாதை என அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தான் அந்த சல்யூட்டை தனது ஆறு மாத பயிற்சியில் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதே போட்டியில் ஷெல்டன் காட்ரேல் இரண்டு கேட்ச்களும் பிடித்தார். முதல் பாதியில் ரன்களைக் கட்டுப்படுத்தியவர், கடைசி ஓவர்களில் பந்து வீசும் போது ரன்களை வாரி இறைத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 ஓவர்கள் வீசிய அவர் 56 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. எட்டாம் வரிசை பேட்ஸ்மேன் நாதன் கோல்டர் நைல் 92 ரன்கள் அடித்தும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் அடித்தும் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

Story first published: Thursday, June 6, 2019, 19:02 [IST]
Other articles published on Jun 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+