Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒண்ணு, ரெண்டு தப்புன்னா பரவாயில்லை.. ஒட்டு மொத்தமா சொதப்பிய அம்பயர்கள்.. பரிதாப வெஸ்ட் இண்டீஸ்!

Recommended Video

WORLD CUP 2019: அடுத்தடுத்து சர்ச்சை! பரபரப்பை ஏற்படுத்திய மேற்கிந்திய தீவுகள் போட்டி- வீடியோ

நாட்டிங்ஹாம்: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில், அம்பயர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கொடுத்த பல தீர்ப்புகள் தவறாக இருந்தது.

1
43653

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா.

அந்த அணி துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் டாப் ஆர்டரை விரைவாக இழந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், கோல்டர் நைல் ஆட்டத்தால் 288 ரன்கள் எடுத்தது.

தவறான தீர்ப்புகள்

தவறான தீர்ப்புகள்

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. கூடவே, அம்பயர்கள் தவறான தீர்ப்பும் தொடங்கியது. 3வது ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். அந்த ஓவரின் ஐந்தாம் பந்தில் கிறிஸ் கெயிலுக்கு அம்பயர் கஃப்பானி எல்பிடபுள்யூ கொடுத்தார். உடனே ரிவ்யூ செய்து தப்பினார் கிறிஸ் கெயில்.

கெயில் மீண்டும் ரிவ்யூ

கெயில் மீண்டும் ரிவ்யூ

அந்த ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஸ்டார்க் எல்பிடபுள்யூ கேட்க, அம்பயர் அவுட் கொடுத்தார். மீண்டும், கெயில் ரிவ்யூ செய்து தப்பித்தார். பின்னர் கிறிஸ் கெயில், 5வது ஓவரில் கிறிஸ் கெயில் ரிவ்யூ செய்தும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இது விசித்திரமான சம்பவமாக பார்க்கப்பட்டது.

இன்னொரு தவறு

இன்னொரு தவறு

அத்தோடு, இந்த அம்பயர் குழப்பம் முடிவுக்கு வந்தது என நினைத்த போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 5வது ஓவரில் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்த பந்துக்கு முந்தைய பந்தை ஸ்டார்க் வீசிய போது சுமார் 4 இன்ச் வரை காலை கிரீஸ்-க்கு வெளியே வைத்துள்ளார்.

நோ பால்?

நோ பால்?

அந்த பந்துக்கு அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பந்துக்கு நோ பால் கொடுத்திருந்தால், கெயில் ஆட்டமிழந்த பந்து ஃப்ரீ-ஹிட் ஆக இருந்திருக்கும். இந்த விஷயம் தெரிய வந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

ஹோல்டருக்கு எல்பிடபுள்யூ

ஹோல்டருக்கு எல்பிடபுள்யூ

அடுத்து 30வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார் அம்பயர். ஹோல்டர் ரிவ்யூ செய்து தவறான அம்பயர் தீர்ப்பில் இருந்து தப்பினார்.

அடுத்த ரிவ்யூ

அடுத்த ரிவ்யூ

அடுத்து 36வது ஓவரில் ஆடம் சாம்பா பந்தில் ஹோல்டருக்கு மீண்டும் ஒரு எல்பிடபுள்யூ கொடுக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டும் ரிவ்யூ செய்து தப்பினார் ஹோல்டர். சுமார் நான்கு முறை ரிவ்யூ செய்து, நான்கு தவறான எல்பிடபுள்யூ தீர்ப்புகளில் இருந்து தப்பியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அம்பயர் தீர்ப்புகள்

அம்பயர் தீர்ப்புகள்

ஐபிஎல் தொடரின் போது அம்பயர்களின் தவறான தீர்ப்புகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், அது உள்ளூர் தொடர் என்பதால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கியமான தொடர்களிலும் அம்பயர்கள் இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

Story first published: Thursday, June 6, 2019, 23:56 [IST]
Other articles published on Jun 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+