Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செக்யூரிட்டி வேலையை விட்டு ஓராண்டு.. வெ.இ அணியில் இடம்பிடித்து மிரட்டல்.. யார் இந்த ஷமார் ஜோசப்?

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள ஷமார் ஜோசப், ஓராண்டுக்கு முன் செக்யூரிட்டியாக பணியாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷமார் ஜோசப். 24 வயதாகும் ஷமார் ஜோசப், சர்வதேச கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். கயானாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஷமார் ஜோசப். சுமார் 300 பேர் மட்டுமே உள்ள கிராமத்தில் கிரிக்கெட் பார்ப்போரின் எண்ணிக்கையே குறைவு தான்.

AUS vs WI : Who is Shamar Joseph? Ex Security Guard to a International Cricketer in just one year of Time

இவ்வளவு ஏன், 2018ஆம் ஆண்டு தான் அந்த கிராமத்திற்கு இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் ஷமார் ஜோசப் விளையாடியதில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஷமார் ஜோசப், ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பணியாற்ற வேண்டும். அதன்பின் தீவிர முயற்சியால் கயானா வாரியர்ஸ் அணியில் நெட் பவுலராக முன்னேறியுள்ளார்.

அப்போது ஷமார் ஜோசப்பை பார்த்த சில நிமிடங்களில் அந்த அணியின் அனாலிஸ்ட்-டாக பணியாற்றிய அஸ்வினின் நண்பர் பிரசன்னா, நீங்கள் ஏன் இன்னும் கயானா அணியில் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன்பின் உடனடியாக இம்ரான் தாஹிரிடம் கூறி, அடுத்த போட்டியிலேயே ஷமார் ஜோசப் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். அங்கிருந்து தான் ஷமார் ஜோசப்பின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் செக்யூட்டியாக பணியாற்றி வந்த ஷமார் ஜோசப், ஒரே ஆண்டில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை முதல் பந்திலேயே வீழ்த்தும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதுகுறித்து ஷமார் ஜோசப் பேசுகையில், செக்யூரிட்டி என்று சொல்வதை விடவும் கிரிக்கெட் வீரர் என்று அழைப்பது நன்றாக உள்ளது. செக்யூரிட்டி பணி எளிதாக இருக்காது. 12 மணி நேரம் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும். கிரிக்கெட்டும் எளிதான விஷயமில்லை தான்.

ஆனால் கிரிக்கெட் விளையாடுவதை மனதார விரும்பி செய்கிரேன். எனது மீத வாழ்க்கை முழுக்கவும் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன். அதற்காக 50 வயது வரை விளையாட முடியாது. ஆனால் கிரிக்கெட் விளையாடும் வரை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடம் இருப்பேன் என்று கூறியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 18, 2024, 20:28 [IST]
Other articles published on Jan 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+