Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்லெட்ஜிங்கில் சீறிய ஸ்டீவ் ஸ்மித்.. பவுலிங்கால் பழிவாங்கிய பரிந்தர்! இந்தியா-ஆஸி. போட்டியில் அனல்

பெர்த்: இந்திய புதுமுக பவுலர் பரிந்தர் ஸ்ரனை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஸ்லெட்ஜிங் செய்ததும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதையும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.

5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. முதல் ஒருநாள் போட்டி நேற்று பெர்த் டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

ஐபிஎல் வீரர்

ஐபிஎல் வீரர்

இந்த போட்டியில் இந்திய அணியிக்காக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன் முதல்முறையாக சர்வதே கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்காக கடந்த சீசனில் ஆடியவர் இந்த பரிந்தர் ஸ்ரன்.

ஆரம்பமே அசத்தல்

ஆரம்பமே அசத்தல்

ஆரம்ப போட்டியிலேயே அசத்தி ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வார்னர், ஆரோன் பின்ச் ஆகியோர் விக்கெட்டுகளை சரித்தார். முதல் ஸ்பெல் முழுக்க பரிந்தர் ஸ்ரன் கட்டுப்பாட்டில் இருந்தது.

அட்டாக் பண்ணிய புலி

அட்டாக் பண்ணிய புலி

முதல் ஸ்பெல்லில் வீசிய 6 ஓவர்களுக்கு 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்பிறகு, 40வது ஓவருக்கு பிறகே பரிந்தர் ஸ்ரனை மீண்டும் பந்து வீச அழைத்தார் டோணி.

ஆட்டம் கைமீறிவிட்டது

ஆட்டம் கைமீறிவிட்டது

பரிந்தர் ஸ்ரன் பந்து வீச வருவதற்குள், ஆட்டம் முழுக்க ஆஸ்திரேலியா கட்டுப்பாட்டுக்கு போயிருந்தது. ஏனெனில், பெய்லி மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி வைத்திருந்தனர்.

ஸ்மித்தின் சேட்டை

ஸ்மித்தின் சேட்டை

45வது ஓவரை பரிந்தர் ஸ்ரன் வீசியபோது, அதை எதிர்கொண்ட ஸ்மித்துக்கு, ஒரு பவுன்சரை வீசினார். அப்போது, கிரீசிலிருந்து முன்வந்து பரிந்தர் ஸ்ரனிடம், ஸ்மித் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். அதே ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்தபோது, மீண்டும், முணுமுணுத்தார் ஸ்மித்.

சாந்தமான ஸ்ரன்

சாந்தமான ஸ்ரன்

ஸ்மித் எவ்வளவுதான் மோசமாக நடந்துகொண்டாலும், பரிந்தர் ஸ்ரன் சாந்தமாக இருந்தார். பதிலுக்கு எதையும் அவர் பேசவில்லை. ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் நடப்பது சகஜம்தான் என்பது தெரிந்திருந்ததால் பரிந்தர் ஸ்ரன் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தவரை போல காணப்பட்டார்.

பழிவாங்கினார் பரிந்தர்

பழிவாங்கினார் பரிந்தர்

இந்நிலையில், பரிந்தர் ஸ்ரனுக்கு, ஸ்மித்தை பழிவாங்கும் வாய்ப்பு கிட்டியது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பரிந்தர் ஸ்ரன் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை ஆப் ஸ்டம்ப் திசையில் வீசினார் பரிந்தர் ஸ்ரன். அதை ட்ரைவ் செய்ய முயன்ற ஸ்மித்தை, கேட்ச் பிடித்து அவுட் செய்தார் கோஹ்லி.

ஸ்மித்துக்கு அடிமேல் அடி

ஸ்மித்துக்கு அடிமேல் அடி

149 ரன்களில் இருந்த ஸ்மித், 1 ரன்னில் 150 அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெற்றிக்கான ரன்னை அடிக்கவும் முடியவில்லை. இதனால் தலையை தொங்கபோட்டுக்கொண்டே பெவிலியனை நோக்கி நடந்தார் ஸ்மித். ஒருவழியாக பரிந்தர் ஸ்ரன் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஸ்லெட்ஜிங் செய்த ஸ்மித்துக்கும் தனது பவுலிங்கால் பதிலடி கொடுத்தார். இதில் கவனிக்க வேண்டியது, ராஜஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு ஸ்மித்தும், பரிந்தர் ஸ்ரனும் ஒன்றாக ஆடியிருந்தனர் என்பதுதான்.

Story first published: Wednesday, January 13, 2016, 14:05 [IST]
Other articles published on Jan 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+