Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து வீரர்களை வறுத்து எடுக்கும் ஆஸி. ரசிகர்கள்..!! களைகட்டுகிறது ஆஷஸ் தொடர்

மெல்போர்ன்: கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போது உலகம் முழுவதும் ரசிகர்கள் எப்படி எதிர்பார்ப்பார்களோ, அதற்கு சற்றும் குறையாத டெஸ்ட் தொடர் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர்.

இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இல்லாததற்கு முன்பே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்பார்பார்கள் .

சுமார் 138 ஆண்டுகளாக நடைபெறும் இந்த தொடரை வெல்லவில்லை என்றால் இரு நாட்டுக்குமே இது மான பிரச்சினை.

டிம் பெயின்

டிம் பெயின்

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. பாலியல் ரீதியிலாக பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய புகாரில் சிக்கிய ஆதிரேலிய வீரர் டிம் பெயின், கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் விலகினார். மன ரீதியிலாக பாதிக்கப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறினார்

 கிண்டல்

கிண்டல்

இதனால் டிம் பெயினை கிண்டல் செய்ய மாட்டோம் என்று இங்கிலாந்து ரசிகர்களின் பார்மி ஆர்மி ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களை விடுவதாக இல்லை. முன் எப்போதும் மைதானத்தில் தான் கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் விளையாட்டாக கிண்டல் செய்வார்கள்.

காலிங்வுட்

காலிங்வுட்

ஆனால் இம்முறை தொடர் தொடங்குவதற்கு முன், இங்கிலாந்து வீரர்களை காணும் போது எல்லாம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வம்பு இழுக்கின்றனர். இங்கிலாந்து வீரர்கள் பேருந்தில் ஏறும் போது, இம்முறை நீங்கள் எப்படி ரன்கள் அடிக்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று கெட்ட வார்த்தையுடன் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூறியுள்ளனர்

Recommended Video

Ashes 2021-22: Alex Carey to debut, Replaces Tim Paine! Aussies Confirms Squad | OneIndia Tamil
ஆண்டர்சன்

ஆண்டர்சன்

இதனை கேட்ட இங்கிலாந்து அணியின் ஃபில்டிங் பயிற்சியாளர் காலிங்வுட், அப்படி நடக்க வாய்ப்பில்லை நண்பரே என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டார். இதே போன்று உணவகத்திற்கு சென்ற ஆண்டர்சன், பிராட்டை, ஆஸ்திரேலிய ரசிகர்கள் தகாத வார்த்தையில் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதற்கு பதிலை நான் களத்தில் சொல்கிறேன் என்று ஆண்டர்சன் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.

Story first published: Friday, December 3, 2021, 15:56 [IST]
Other articles published on Dec 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+