Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ஒரே காரணம்.. உங்களுக்கு பயம்.. இந்திய அணியை விளாசி தள்ளிய ஆஸி. கோச்.. பரபரப்பு கருத்து!

சிட்னி: இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை பிரிஸ்போனில் ஆட மறுப்பது ஏன் என்று ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் கோச் பிராட் ஹாடின் விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்க உள்ளது. அங்கு அதிக கொரோனா கேஸ்கள் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட உள்ளது. அங்கு இந்திய வீரர்கள் கூடுதலாக சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஆனால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகளை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை இந்திய வீரர்கள் விரும்பவில்லை.

கோரிக்கை

கோரிக்கை

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் , பிரிஸ்போன் நகரில் நடத்த கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்போன் நகரில் நான்காவது டெஸ்ட் போட்டியை ஆட இந்திய அணி ஒப்புக்கொண்டுள்ளது.

ஒப்புக்கொண்டது

ஒப்புக்கொண்டது

இந்த நிலையில் இந்திய அணி பிரிஸ்போனில் ஆட மறுப்பது ஏன் என்று ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் கோச் பிராட் ஹாடின் விளக்கம் அளித்துள்ளார். பிராட் ஹாடின் தனது பேச்சில், இந்திய அணி பிரிஸ்பானில் ஆடுவதற்கு அஞ்சுகிறது. அவர்களுக்கு அங்கு ஆடும் விருப்பம் இல்லை.

ஏன்

ஏன்

ஆஸ்திரேலிய அணியை பிரிஸ்போனில் வீழ்த்துவது கடினம். பிரிஸ்போனில் எளிதாக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முடியாது. இதனால் ஆஸ்திரேலியாவை பார்த்து இந்திய வீரர்கள் அச்சம் அடையலாம். ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்கு பயம்.

காரணம்

காரணம்

இதனால் கொரோனா விதி போன்ற காரணங்களை இந்திய வீரர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலிய அணிக்கும் இதே கொரோனா விதிகள் பொருந்தும். அவர்களும் நீண்ட காலமாக கொரோனா விதியை பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணிக்கு மட்டும் பிரச்சனை என்றால், அவர்களுக்கு பயம் என்றுதான் அர்த்தம். இதற்காகவெல்லாம் கடைசி டெஸ்ட் போட்டியை இடம்மாற்ற முடியாது. ஆஸ்திரேலியாவில் விதிகள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துதான் நீங்கள் எல்லாம் ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளீர்கள். அதனால் அதை பின்பற்ற வேண்டும்.

பின்பற்ற வேண்டும்

பின்பற்ற வேண்டும்

எங்களால் விதிகளை பின்பற்ற முடியாது. போட்டியின் இடத்தை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்க கூடாது. ஆஸ்திரேலிய அணிக்கும் இதே விதிதான். இந்திய அணிக்கு தனியாக யாரும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்று பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 12:46 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+