Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உஸ்மான் கவாஜா 150 ரன்கள்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.. கடும் நெருக்கடியில் ரோகித் சர்மா

அகமதாபாத் : இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹேட் 32 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 38 ரன்களில் வெளியேறினார்.

பீட்டர் ஹாண்டஸ்கோம்ப் 17 ரன்களில் வெளியேற, கவாஜா மற்றும் கேமிரான் கிரீன் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

255 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் கேமிரான் கிரீன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை அடிக்க தொடங்கிவிட்டார். குறிப்பாக உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரன்கள் கசிந்தது.

வலுவான நிலை

வலுவான நிலை

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் எடுக்கவிட்டாலும் பரவாயில்லை, ரன்கள கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 50 ரன்களை கடக்க, கேம்ரான் கிரீன் 95 ரன்களை விளாசி களத்தில் நிற்கிறார்கள். தற்போது ஆஸ்திரேலிய அணி மதிய நேர உணவு இடைவேளையின் போது 347 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

நெருக்கடியில் இந்தியா

நெருக்கடியில் இந்தியா

ஆஸ்திரேலிய அணி மாலை 4 மணி வரை விளையாடி விட்டு 500 ரன்களுக்கு மேல் ஸ்கோரை சேர்த்து பிறகு டிக்ளேர் செய்யலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சில் பெரிய ரன்களை சேர்க்க வேண்டும்.

ஒருமுறை பேட்டிங்

ஒருமுறை பேட்டிங்

ரோகித், சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இல்லையனில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுவிடும். எனனும் இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, ஆஸ்திரேலிய அணி ஒரு முறை மட்டும் பேட்டிங் செய்ய முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

Story first published: Friday, March 10, 2023, 13:03 [IST]
Other articles published on Mar 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+