Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட ஆஸ்திரேலியா! இந்தியாவை குறைத்து மதிப்பீட்டதா கம்மின்ஸ் படை!

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சூழலில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் டிரா செய்தாலே போதுமானது.

ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக இந்த போட்டியில் சமன் செய்தாலே போதுமானது என்பதால் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்பதற்காகவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்படும். கடந்த இரண்டு முறையும் இந்திய அணி சிட்னிக்கு வந்த போது டிரா செய்தாலே போதுமானது என்ற கட்டத்தில் தான் விளையாடியது.

அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான் அமைத்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் பெரிய ஸ்கோர் குவித்து போட்டியை டிராவுக்கு நோக்கி கொண்டு சென்றனர். இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா அந்த இடத்தில் இருப்பதால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதற்கு நேர் மாறாக ஆஸ்திரேலிய அணி பச்சை பசேல் என புற்கள் நிறைந்த ஆடுகளத்தை அமைத்திருக்கிறது.இதன் மூலம் பேட்டிங் கொஞ்சம் கடினமாக மாறிவிடும். மேகமூட்டங்கள் சூழ்ந்தால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும்.இதனால் பேட்டிங் செய்ய இரு அணிக்குமே கடினம். இதனால் ஆஸ்திரேலியா அணி சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை கொண்டு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து விட்டது.

ஆஸ்திரேலிய அணி நினைத்தார் போலவே இந்தியா 185 ரன்களில் ஆட்டம் இழந்தது. ஆனால் இந்தியாவிடமும் நல்ல வேகப்பந்து வீச்சு இருக்கிறது என்பதை ஆஸ்திரேலியா மறந்துவிட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஸ்மித் உள்ளிட்ட பெரிய ஸ்கோர் குவித்தால் மட்டுமே இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் விட அதிக ரன்கள் எடுக்க முடியும்.இதனால் ஆஸ்திரேலிய அணி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, January 4, 2025, 6:38 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+