Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் சதம்.. ரிஷப் பண்ட் மாதிரி அதே இன்னிங்ஸ்.. விக்கெட்டுக்கு போராடும் இந்தியா

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தெதாடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதம் விளாசினார். டாசை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தது.

ஆஸ்திரேலிய அணி 2 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து , அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனையடுத்து இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Australia middle order batsman travis head century put india in back foot

76 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்த நிலையில், களத்துக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு பக்கம், ஸ்மித் பொறுமையாக ரன்களை சேர்க்க, மறுபக்கம் டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேவிய அணியின் ஸ்கோரை வேகமாக நகர்த்தி வந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது ரன்களை சேர்த்த டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளை விரட்டி 60 பந்துகளில் அரைசதம் கடந்தார். எனினும் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு தண்ணீர் காட்டிய டிராவிஸ் ஹெட், குறிப்பாக உமேஷ், ஷர்துல் பந்துவீச்வை வெளுக்க, ரன்கள் வேகமாக வந்தது.

இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டை வீழத்த, இந்திய அணி வீரர்கள் ஷாட் பந்துகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவருடைய தலையில் எல்லாம் பந்து பட்டது. எனினும் அவருடைய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் இந்திய வீரர்களால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை.

இதனால் 106 பந்துகளில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்., இதில் 14 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இது இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் அடித்த முதல் சதம் ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஹெட்க்கு இது 4வது சதம். இவருடைய அதிரடி ஆட்டம், இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் ஆடும் இன்னிங்ஸ் போல் இருந்தது. தற்போது இந்திய அணியில் ஜடேஜா மட்டும் தான், இடது கை பேட்ஸ்மேன் இருக்கிறார். இதே போல ஒரு இன்னிங்சை அவர் ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியா அடிக்கும் ஸ்கார் பக்கமாவது இந்தியா வர முடியும். முதல் நாள் முடீவில் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, June 7, 2023, 21:19 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+