
விசாரணை
இந்த நிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்க உள்ளது. அங்கு அதிக கொரோனா கேஸ்கள் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட உள்ளது. அங்கு இந்திய வீரர்கள் கூடுதலாக சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மோசம்
இந்த நிலையில் இந்த கூடுதல் கட்டுப்பாட்டு விதிகளை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் , பிரிஸ்போன் நகரில் நடத்த கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளது.

ஆனால் என்ன
ஆனால் இந்திய அணியின் கோரிக்கையை ஏற்கும் எண்ணம் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கட்சி
ஆஸ்திரேலியாவின் எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கியமான எம்பிக்களான ராஸ் பேட்ஸ், டிம் மாண்டார் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வந்தால் ஆஸ்திரேலிய விதிகளை மதிக்க வேண்டும். அதுதான் முறை. விதிகளை மதிக்கவில்லை என்றால் அவர்கள் வர கூடாது.

பொதுவானது
கட்டுப்பாட்டு விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவர்களுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை என்றால் கிளப்பி செல்லலாம். இது மிகவும் சாதாரண விஷயம். அவர்கள் கட்டாயமாக விதிகளை பின்பற்ற வேண்டும் என்று இரண்டு பேரும் குறிப்பிட்டுள்ளனர்.

கோபம்
ஆஸ்திரேலிய எம்பிக்கள் இப்படி பேசுவது இந்திய அணியை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அணி நிர்வாகமும் இதனால் கோபத்தில் உள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications