Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்ன டா இந்தியாவுக்கு வந்த சோதனை.. ஆஸி. இதை செய்தால் தோற்றதே இல்லையாம்.. வெற்றி உறுதி

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே ஆஸ்திரேலியாவை அடித்து கொள்ள முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு தலைவலியை கொடுக்க கூடிய அணி என்றால், அது இந்தியா தான்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு சாதனையை செய்தால், அவர்கள் தோற்றதே இல்லையாம் என்று அசத்தலான ரெக்கார்டை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்திருந்த போது, ஸ்மித்துடன், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர்.

Australia never lost the test match when they have 250 runs partnership

இருவரும் அடுத்தடுத்து சதம் அடிக்க 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 285 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால், அவர்கள் ஒரு போதும் தோற்றதே இல்லை.

இதே போன்று எதிரணியை இந்தியா 250 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க விட்டால், இந்தியாவும் இதுவரை ஒரு போட்டியிலும் வென்றது இல்லையாம். இதுவரை 29 முறை அப்படி நடந்திருக்கிறது. இதே போன்று ஐசிசி நாக் அவுட்டில் எதிரணிகளை அதிக சதம் அடிக்க விட்ட அணி என்ற சோகமான பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா இதுவரை 6 சதங்கள் அடிக்கவிட்டுள்ளது.

இதே போன்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 8 சதம் அடித்திருக்கிறார். இதில் அனைத்திலுமே ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது ஹெட், இன்று 9 முறையாக சதம் அடித்திருக்கிறார். இதனால், நடக்கும் அனைத்துமே இந்தியாவுக்கு எதிராக தான் நடந்து இருக்கிறது.

Story first published: Thursday, June 8, 2023, 19:53 [IST]
Other articles published on Jun 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+