ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அட்மின் மூக்கை உடைத்த ஜடேஜா..!! ரசிகர்கள் ஆரவாரம்.. மறைமுக பதில்!
மும்பை: ஐ.பி.எல். 15வது சீசனுக்காக அணிகளும் , வீரர்களும் மட்டுமல்ல, அதனை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தயாராகி வருகிறது
ஐ.பி.எல். ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இந்த மெகா ஏலத்தை ஸ்டார் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.
இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை அணி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு டிவிட் போட, அதற்கு ஜடேஜா தக்க பதிலடி தந்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிட்
ஐ.பி.எல். அணிகள் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தயார் செய்து வருகின்றன. ரசிகர்களும் எந்த விரர்களை தங்களது அணி எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் தேர்வு செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணி எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ரசிகர்கள் தேர்ந்து எடுங்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு டிவிட் போட்டுள்ளது

பேட்டிங் வரிசை
அதில் சென்னை அணி தக்க வைத்துள்ள வீரர்களைபேட்டிங் வரிசையில் போட்டு மற்றவர்களை தேர்ந்து எடுங்கள் என்று அதன் அட்மின் போட்டு இருந்தார். இதில் ருத்துராஜ்க்கு பேட்டிங் வரிசையில் முதல் இடமும், மொயின் அலிக்கு 3வது இடமும், தோனிக்கு 7வது இடமும், ஜடேஜாவுக்கு 8வது இடமும் போட்டு இருந்தார்.

ஜடேஜா பதிலடி
இதனால் கடுப்பான ஜடேஜா, என்னை ஏன் இவ்வளவு சீக்கிரமாக 8வது வரிசையில் இறக்கிவிடுகிறீர்கள், எனக்கு பேட்டிங் வரிசையில் 11வது இடத்தை தாருங்கள் என்று நகைச்சுவை கலந்து கூறினார். இதனால் அந்த அட்மினின் மூக்கு உடைப்பட்டது. இதன் மூலம் , நடப்பு ஐ.பி.எல் போட்டியில் முன்வரிசையில் இறங்க போகிறேன் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

மறைமுக பதில்
பேட்டிங்கில் கீழே இறங்குவதால், தம்மால் முழு திறனையும் காட்ட முடியவில்லை என்று ஜடேஜா புலம்பி கொண்டிருந்த நிலையில், அவருக்கு தோனி பேட்டிங் வரிசையில் புரோமோஷன் வழங்கியுள்ளது தெரிகிறது. இதே போல் இந்திய அணியிலும் எனக்கு புரோமோஷன் வேண்டும் என்பதை ஜடேஜா ஒரே டிவிட் மூலம் மறைமுகமாக கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications