மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மொக்கை வாங்கிய சம்பவம் ரசிகர்களை சிரிப்பலையை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 296 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்த நிலையில் ஆட்டத்தின் 68 வது ஓவரில் சிராஜ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கேமரான் கிரீன் வீசிய பந்து அவரது காலில் பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டார்கள். அதற்கு நடுவர் யோசிக்காமலே அவுட்டு கொடுத்து விட்டார்.

எனினும் சிராஜ் இதற்கு டி ஆர் எஸ் கேட்டார். டி ஆர் எஸ் முடிவு பார்ப்பதற்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் இது அவுட் தான் என நினைத்து அனைவரும் பெவிலியன் நோக்கி சென்று விட்டார்கள். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பிறகு தான் காலில் பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்றாம் நடுவர் இது அவுட் இல்லை என அறிவித்தார்.
இதனை எடுத்து இந்திய ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுக்க அதன் பிறகு தான் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தாங்கள் மொக்கை வாங்கியதே தெரிய வந்தது. ஒரு சிலர் பவுண்டரி எல்லை கோட்டை தாண்டி பெவிலினுக்கே சென்று விட்டார்கள். இதனை அடுத்து இது நாட் அவுட் என தெரிந்தவுடன் அங்கிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஓடிவந்து மீண்டும் பில்டிங்கில் நின்றார்கள்.இது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. எனினும் இந்திய அணி இந்த சம்பவத்துக்கு பிறகு கூடுதலாக இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 121 ஓவர்கள் பிடித்த நிலையில் இந்திய அணி தரும் 69.4 ஓவரை மட்டும்தான் பேட்டிங் செய்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 90 ஓவருக்கு மேல ஆவது பிடிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் போட்டியில் நாம் டிராவாவது பெற முடியும் என்பது கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி. தற்போது ஆஸ்திரேலிய அணி கையே ஓங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.