Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தடை விதிக்க போகிறோம்.. இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறோம்.. ஆஸி. கிரிக்கெட் வாரியம் பரபர அறிக்கை!

சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலிய ரசிகர்களால் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கி வருகிறார்கள். மத ரீதியாகவும், இன ரீதியாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்களை சீண்டி உள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இப்படி விமர்சனம் செய்து வந்துள்ளனர். முக்கியமாக இந்திய வீரர் சிராஜ் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

அறிக்கை

அறிக்கை

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன ரீதியான தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக எந்த விதமான சகிப்புத்தன்மையையும் நாங்கள் காட்ட மாட்டோம்.

வீரர்கள்

வீரர்கள்

வீரர்களுக்கு எதிரான இது போன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கையை எடுக்கும். வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து இருக்கிறோம்.

ஐசிசி

ஐசிசி

இவர்களை ஐசிசி விதிப்படி விசாரணை செய்வோம். இவர்களை முறையான விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுப்போம். இவர்கள் மீது தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் .

தடை

தடை

ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு இவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இந்த தொடரை நடத்தும் நாடு என்ற விதத்தில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் எங்கள் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்கிறோம்.

மன்னிப்பு

மன்னிப்பு

வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். சிட்னி மைதானம் எல்லோரையும் வரவேற்கிறது. வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம், என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, January 10, 2021, 12:06 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+