Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு அந்தளவுக்கு "பவர்" கிடையாது.. 5 இந்திய வீரர்களை ஒன்னும் செய்ய முடியாத ஆஸி.. செம டிவிஸ்ட்

சிட்னி: ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்களை தனிமைப்படுத்த வைக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் போட்ட திட்டம் காலியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வளவு நாட்கள் இந்த தொடர் பெரிய அளவில் சர்ச்சை இன்றி சென்று கொண்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு விதிகளால் இரண்டு அணிகளுக்கும் இடையே தேவையில்லாத மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆகும்.

பிரச்சனை

பிரச்சனை

பயோ பபுளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான சில புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன. இந்திய வீரர்கள் கொரோனா விதிகளை மீறிவிட்டார்கள், இதனால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

திட்டம்

திட்டம்

இந்திய வீரர்கள் விதியை மீறிவிட்டதாக கூறி அவர்களை தனிமைப்படுத்தும் திட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இருந்தது. இவர்களை பயிற்சி மேற்கொள்ள விடாமல் தடுத்து, தனிமைப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. அதோடு இவர்களை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

மோசமானது

மோசமானது

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இந்த கோபத்தில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய அணியை பழி வாங்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகளை விதிக்க நினைத்தது. 5 இந்திய வீரர்களும் தனியாக பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்கள் மீது இப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் விதிகளின்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்கள் மீது தடை விதிக்க முடியாது. இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எந்த விதமான உத்தரவும் போட முடியாது.

பயிற்சி

பயிற்சி

நீங்கள் தனியாக பயிற்சி செய்ய வேண்டும், நீங்கள் ஆட கூடாது என்று இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவு போட முடியாது. இந்திய வீரர்களை கட்டுப்படுத்தும் பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடையாது பிசிசிஐ நிர்வாகிகள் மிகவும் கறாராக கூறியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது பின்வாங்கி உள்ளது. இந்திய வீரர்களுக்கு போட்ட உத்தரவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாபஸ் வாங்கி உள்ளது.

தனிமை

தனிமை

அதாவது 5 இந்திய வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியதை தற்போது வாபஸ் வாங்கி உள்ளது. அதோடு இந்திய அணியுடன் 5 வீரர்களும் பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. முடிந்தளவு தனி மனித இடைவெளி மட்டும் கடைபிடியுங்கள், தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Story first published: Monday, January 4, 2021, 11:08 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+