சச்சினுக்கு ஆஸ்திரேலியா செய்த மிகப் பெரிய கவுரவம்.. எந்த வீரருக்கும் இல்லை.. சிட்னியில் மறையாத புகழ்
சிட்னி : சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய கௌரவம் ஒன்றை கொடுத்துள்ளது. கிரிக்கெட்டில் மிகவும் பாரம்பரிய மைதானங்களில் ஒன்றானது சிட்னி கிரிக்கெட் மைதானம் ஆகும்.
இங்கு வீரர்கள் மைதானத்திற்கு வர நிறைய கதவுகள் இருக்கிறது. இதில் ஒரு கதவுக்கு மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு கதவுக்கு தற்போது சச்சின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் பிரைன் லாரா என இருவரின் பெயர்களும் சூட்டப்பட்டு இருக்கிறது.

ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக 150 வரை அடித்திருக்கிறார். வெளிநாட்டு மைதானங்களில் சிட்னி தமக்கு பிடித்த மைதானம் என்று சச்சின் பலமுறை கூறியிருக்கிறார்.
இங்கு அவர் இரட்டை சதமும் அடித்திருக்கிறார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சச்சின் சிட்னியில் 785 ரன்களும், அதிகபட்சமாக 241 அடித்திருக்கிறார். இதேபோன்று நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லாரா 384 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அதிகபட்சம் 277 ரன்கள் ஆகும் இதனால் இவர்களை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதனை செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்த நடவடிக்கைக்கு சச்சினும் லாராவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டு மைதானத்தில் இந்தியர்கள் பெயர் ஒரு இடத்திற்கு வைப்பது இதுதான் முதல் முறை ஆகும்.


Click it and Unblock the Notifications